ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் முக்கிய காட்சிகள் நீக்கம்... படக்குழு அதிரடி முடிவு!

சென்னை : ஃப்ரெண்ட்ஷிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை பற்றிய பேசும் படமாக ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் வெளியாகி உள்ளது.

Recommended Video

Losliya Response on Her First Movie FRIENDSHIP | Harbhajan Singh, Friendship movie public review

லாஸ்லியா, ஹர்பஜன்சிங்,அர்ஜுன், சதீஷ் என பலர் இந்த திரைப்படத்தில் நடித்து இருக்க இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இதில் சில காட்சிகள் நீக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

கல்லூரி கதை களத்தை

கல்லூரி கதை களத்தை

நீண்ட லாக்டவுனுக்கு பிறகு இப்பொழுது திரைப்படங்கள் ஒவ்வொன்றாக திரையரங்கில் வெளியாகி வருகிறது அந்த வகையில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர்கள் ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். கல்லூரி கதை களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் லாஸ்லியா ஹீரோயினியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இளைஞர்களின் ஃபேவரைட்

இளைஞர்களின் ஃபேவரைட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்த ஹர்பஜன் சிங் இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் மேலும் அர்ஜுன் மற்றும் சதீஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஒரு கல்லூரி இளைஞர்களைப் பற்றிய படம் என்பதால் இளைஞர்களின் ஃபேவரைட் விளையாட்டான கிரிக்கெட் விளையாட்டை பற்றிய பல காட்சிகள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக

காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக

கலகலப்பான கல்லூரி காட்சிகள், அதிரடி சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள், கிரிக்கெட் விளையாட்டு என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் இந்த திரைப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் பிரபல மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது பலரும் அறிந்ததே. தமிழ் ரசிகர்களின் ரசனைக்காக இந்த திரைப்படத்தில் கிரிக்கெட் விளையாட்டு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

படக்குழு நீக்கி உள்ளதாக

படக்குழு நீக்கி உள்ளதாக

கிரிக்கெட் காட்சிகள் இப்படத்தில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதால் பார்ப்பவர்களுக்கு சற்று தொய்வு ஏற்படும் என்பதற்காக தேவையில்லாத கிரிக்கெட் காட்சிகளை படக்குழு நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி இனி திரையரங்குகளில் வெளியாகும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் குறிப்பிட்ட கிரிக்கெட் விளையாட்டு காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X