twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தளபதி 64 படத்திற்கு வந்த சோதனை.. வேதனையில் படக்குழு!

    |

    டெல்லி: டெல்லியில் அதிகரித்திருக்கும் காற்று மாசால் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

    டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காற்று மாசால் முகமூடி அணியாமல் மக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. காற்று மாசு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    சினிமாவில் படிபடியாய் வளர்ந்து வரும் பிரபல யூடியூப்பர் அன்புதாஸன்சினிமாவில் படிபடியாய் வளர்ந்து வரும் பிரபல யூடியூப்பர் அன்புதாஸன்

    தளபதியும் தப்பவில்லை

    தளபதியும் தப்பவில்லை

    டெல்லியில் நிலவும் காற்று மாசால் தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் நீடிக்கும் காற்று மாசுக்கு விஜய் நடிக்கும் தளபதி 64 படமும் தப்பவில்லை.

    இரண்டாம்கட்ட படப்பிடிப்பு

    இரண்டாம்கட்ட படப்பிடிப்பு

    ‘கைதி' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் நடிக்கும் 64வது படத்தை இயக்குகிறார். விஜய் நடித்த பிகில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது.

    படப்பிடிப்பு பாதிப்பு

    படப்பிடிப்பு பாதிப்பு

    இந்நிலையில் டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு விஜய் 64வது படத்தின் படப்பிடிப்பிலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. காற்று மாசால் வேகமாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது மந்தமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    வேகமெடுக்கும்

    வேகமெடுக்கும்

    இதனால் படக்குழு கவலையடைந்திருக்கிறதாம். காற்று மாசு குறைந்தவுடன் படப்பிடிப்பு பழையப்படி வேகமெடுக்கும் என படக்குழு தெரிவித்திருப்பதாக தகவல் பரவியிருக்கிறது.

    English summary
    Delhi air pollution affects Vijay's Thalapathy 64 movie. Thalapathy 64 movie shoots happening in Delhi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X