தலை நகரம் பற்றி எரிகிறது.. நறுவி பட விழாவில்.. பா. ரஞ்சித் ஆவேச பேச்சு!
சென்னை: புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் நறுவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பா. ரஞ்சித் ஆவேசமாக பேசியுள்ளார்.
நாம் இங்கே நறுவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருக்கும் இதே வேளையில் தான், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையால், தலைநகரம் டெல்லி பற்றிக் கொண்டு எரிகிறது என ரஞ்சித் சீறி உள்ளார்.

மேலும், புதியவர்களின் படைப்பான நறுவி மிகப்பெரிய வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த விழாவில், பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய, அதியன் ஆதிரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அட்டகத்தி படத்தை எடுத்து விட்டு, ரிலீஸ் செய்யும் போது, தானும் இப்படி தான் மேடையில், என்ன பேசுவதென்றே தெரியாமல், நடுங்கியதாகவும், அந்த படத்தில் உழைத்த கடைநிலை தொழிலாளர்களுக்கு நன்றி கூட தெரிவிக்க மறந்துவிட்டேன் என்று பல நினைவலைகளையும், சமூக கருத்தைக்களையும் ரஞ்சித் கூறியுள்ளார். வீடியோவை பார்க்க லிங்கை க்ளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











