சதம் அடித்த வாத்தி.. 5 விக்கெட் 106 ரன்கள் விளாசி இங்கிலாந்தை கதறவிட்ட அஸ்வினை கொண்டாடிய ஐபிஎல் அணி!

சென்னை: இங்கிலாந்து வீரர்கள் சிறிதும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களை பலமாக தாக்கிய சூறாவளி கிரிக்கெட் வீரர் அஸ்வினை மாஸ்டர் படத்தின் போஸ்டரை வைத்து எடிட் செய்து கொண்டாடியுள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு பலம் சேர்த்த அஸ்வின், அதை விட ஒரு படி மேலே சென்று 106 ரன்கள் விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் பிரபலங்களையும் மெய் சிலிர்க்க வைத்து விட்டார்.

ஒரு பவுலருக்கு எப்படி இவ்வளவு தைரியம் என பவானியாக மாறி இங்கிலாந்து வீரர்கள் பார்க்க எப்படி பந்து போடணும், எப்படி பந்தை அடித்து ஆடணும் என்கிற அட்டகாசமான பாடத்தை இன்று மாஸ்டராக மாறி அஸ்வின் நடத்தியது வரலாற்று சிறப்பு.

அஸ்வின் மிரட்டல் சதம்

அஸ்வின் மிரட்டல் சதம்

இதுவரை எந்த இந்திய வீரரும் சாதிக்காத புதிய சாதனையை இன்று அஸ்வின் சாதித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 106 ரன்களையும் விளாசி கிரிக்கெட் உலகையே மெர்சலாக்கி உள்ளார்.

தலைவன் வேற ரகம்

தலைவன் வேற ரகம்

அஸ்வினின் இந்த இமாலய சாதனையை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை கலாய்த்தும் அஸ்வினை பாராட்டியும் கொண்டாடி வருகின்றனர்.

வென்ற வாத்தி

இந்நிலையில், ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிடல்ஸ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அஸ்வினின் சாதனையை கொண்டாடும் விதமாக மாஸ்டர் படத்தின் போஸ்டரில் விஜய்க்கு பதிலாக அஸ்வினின் போட்டோவை பொருத்தி வந்து ஆடி வென்ற வாத்தி என அஸ்வினை புகழ்ந்து தள்ளி இருக்கிறது.

நம்ம பையன்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே மாஸ்டர் போஸ்டரை வைத்து அஸ்வினை பாராட்டி உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள், மாஸ்டர் படத்தின் ரீச் உலகளவில் சென்றதை எண்ணி எவனோ நம்ம பையன் தான் போல என கமெண்ட் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர்.

கஸ்தூரி ட்வீட்

அஸ்வின் அடித்த சதத்தை பல பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெர்ஸியில் 99 இருந்தாலும், ஸ்கோர் போர்டில் 106 இருக்கே.. மண்ணின் மைந்தன் சென்னையில் மிரட்டி விட்டார். ஹேட்டர்களுக்கு சரியான பதிலடி என பதிவிட்டு பாராட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X