நடிகை புகார்: பிரபல நடிகரின் மகன் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

By Siva

Recommended Video

பிரபல நடிகரின் மகன் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு- வீடியோ

டெல்லி: நடிகையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி, கருவை கலைத்த நடிகர் மகாக்ஷய் மற்றும் அவரின் தாய் யோகிதா பாலி மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாக்ஷய் பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் ஆவார்.

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் மகாக்ஷய் மீது இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவர் டெல்லியில் உள்ள ரோஹினி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அவர் தனது மனுவில் கூறியதாவது,

கர்ப்பம்

கர்ப்பம்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மகாக்ஷய் என்னுடன் 4 ஆண்டுகள் பழகினார். நாங்கள் நெருங்கிப் பழகியதில் நான் கர்ப்பம் ஆனேன். ஏதோ மருந்து கொடுத்து என் கருவை கலைத்தார். திருமண ஆசை காட்டி ஏமாற்றி என்னை பலாத்காரம் செய்த மகாக்ஷய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிரட்டல்

மிரட்டல்

கரு கலைந்த பிறகு மகாக்ஷயின் தாய் யோகிதா பாலி என்னை மிரட்டினார். என் மகனுடன் உறவை தொடர்ந்தால் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று அவர் மிரட்டினார்.

டெல்லி

டெல்லி

உயிருக்கு பயந்து நான் மும்பையில் இருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்தேன். மகாக்ஷயும் தனது தாயுடன் சேர்ந்து என்னை மிரட்டினார் என்று அந்த நடிகை தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

வழக்கு

வழக்கு

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மகாக்ஷய் மற்றும் அவரின் தாய் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகரின் மகன் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உத்தரவு

உத்தரவு

அந்த பெண்ணின் குற்றச்சாட்டு குறித்து நிச்சயம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். மேலும் மகாக்ஷய் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X