Delhi Ganesh: பேரிழப்பு.. இந்த ஆண்டு மட்டும் இத்தனை படங்களில் நடித்துள்ளாரா டெல்லி கணேஷ்.. சிகரம்

சென்னை: கடைசி காலம் வரை சினிமாவில் நடித்துக் கொண்டே சாக வேண்டும் என்பது தான் ஒவ்வொரு நடிகனின் கனவாக இருக்க முடியும். சமீபத்தில் நடிகர் ஷாருக்கானும் இதை ஒரு மேடையில் குறிப்பிட்டு இருந்தார். 80 வயதிலும் சினிமாவுக்கு சேவையாற்றி வந்த டெல்லி கணேஷ் தூக்கத்திலேயே உயிர் பிரிந்து இந்த மண்ணுலகை விட்டுச் சென்று விட்டார். பலரும் வேண்டி விரும்பும் மரணத்தை அடைந்த டெல்லி கணேஷ் சினிமாவில் சாதித்தது கொஞ்சமல்ல.

மேடை நாடகங்களில் நடித்து வந்த சிவாஜி, எம்ஜிஆர், நாகேஷ் உள்ளிட்ட பலர் சினிமாவுக்கு வந்ததை போலத்தான் டெல்லி கணேஷும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 1976ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினபிரவேசம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1978ம் ஆண்டு ஜெயபாரதி இயக்கத்தில் வெளியான குடிசை படத்திலும் அதே ஆண்டு துரை இயக்கத்தில் வெளியான ஒரு வீடு ஒரு உலகம் படத்திலும் நடித்தார்.

delhi ganesh celebrities death indian 2 2

சினிமா அவருக்கு ரொம்பவே பிடித்துப் போக தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். குணசித்திர கதாபாத்திரங்களில் நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி என தொடர்ந்து கமல்ஹாசன் படங்களில் இவர் நடித்ததை என்றுமே ரசிகர்களும் தமிழ் சினிமா உலகமும் மறக்கவே மறக்காது.

மறக்கமுடியாத கதாபாத்திரங்கள்: 1980ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன் படத்தில் மூர்த்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் டெல்லி கணேஷ். உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்த அவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், ஷாருக்கான், விக்ரம், சூர்யா, தனுஷ் என சினிமாவில் ஏகப்பட்ட பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கமல்ஹாசன் உடன் இவர் நடித்த பல படங்கள் ரசிகர்களால் இன்றளவும் மறக்கமுடியாத கதாபாத்திரங்களாகவே மாறிவிட்டன.

delhi ganesh celebrities death indian 2 2

ராஜ பார்வை, புன்னகை மன்னன், காதல் பரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்த டெல்லி கணேஷ் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் ஐயர் கதாபாத்திரத்தில் நடித்ததை ரசிகர்கள் எந்த காலத்திலும் மறக்கமாட்டார்கள். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் சமையல் கலைஞராக நடித்து சாம்பாரில் மீன் விழுந்துடுச்சா என கமலுடன் இவர் சேர்ந்து அடிக்கும் லூட்டியும், அவ்வை சண்முகி படத்தில் சண்முகியின் முகத்திரையை கிழிக்க இவர் போராடும் ரகளையும் எப்போதுமே ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திவிடும்.

delhi ganesh celebrities death indian 2 2

இந்த ஆண்டும் 3 படங்கள்: ரஜினிகாந்தின் ராகவேந்திரா படத்தில் இவர் நடித்ததையும் கடைசியில் இவர் பாடிய அந்த மந்திரத்தையும் பார்த்து ரஜினிகாந்த் மெய்மறந்து கட்டியணைத்து பாராட்டியதாக டெல்லி கணேஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் பாட்டுப் பாடிக் கொண்டே சாகும் வர்மத்தை இந்தியன் தாத்தா போட லஞ்சம் வாங்கிய அதிகாரியாக நடித்திருந்தார். சுந்தர். சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா நடித்த அரண்மனை 4 படத்தில் வயதானாலும் காமெடியில் கலக்குவேன் என யோகி பாபுவுடன் சேர்ந்து இவர் நடித்தது ரசிகர்களை தியேட்டர்களில் சிரிப்பலையில் ஆழ்த்தியது. விஷால், பிரியா பவானி சங்கர் நடித்த ரத்னம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த ஆண்டு டெல்லி கணேஷ் நடித்திருந்தார். கலைஞனுக்கு மரணமே இல்லை என்பது உண்மை தான். எப்போது டிவி போட்டாலும், ஏகப்பட்ட படங்களில் டெல்லி கணேஷ் சாரின் நடிப்பை நாம் கண்டு ரசித்துக் கொண்டே இருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X