Don't Miss!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் கெரியரில் அஜித்தை தவிர வேறு யாருமே 'அந்த வார்த்தை'யை சொல்லவில்லை: டெல்லி கணேஷ்
Recommended Video
சென்னை: என் இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் அந்த வார்த்தையை அஜித்தை தவிர வேறு எந்த நடிகருமே கூறவில்லை என்கிறார் டெல்லி கணேஷ்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் டெல்லி கணேஷும் நடிக்கிறார். அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் அனுபவம் குறித்து டெல்லி கணேஷ் கல்லூரி விழா ஒன்றில் தெரிவித்தார்.
அந்த விழாவில் பேசிய அவர் கூறியதாவது,
பணத்திற்காக இப்படியா கீழ்த்தரமாக செய்வது?: விஜய் ஹீரோயினை விளாசிய ரசிகர்கள்
மகன்
செட்டில் இடைவேளையின்போது நானும், அஜித்தும் நிறைய பேசுவோம். அப்படி ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபோது என் மகனை ஹீரோவாக வைத்து படம் எடுத்து ரூ. 3 கோடி நஷ்டம் ஏற்பட்டது குறித்து அவரிடம் தெரிவித்தேன்.
டெல்லி கணேஷ்
படம் நன்றாக இல்லை என்று விமர்சித்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் என் மகனின் படத்தை விநியோகஸ்தர்கள் மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்று அஜித்திடம் கூறி வருத்தப்பட்டேன். நான் சொன்னதை கேட்ட அவர் உங்க பையன் நடிக்கிறாரா என்று கேட்டார். என் மகன் படத்தின் ட்ரெய்லரை அஜித்துக்கு செல்போனில் காட்டினேன்.
நடிப்பு
ட்ரெய்லரை பார்த்த அஜித், உங்கள் மகன் நன்றாக இருக்கிறார், நல்லா நடித்திருக்கிறார். அவரை நான் பார்க்க முடியுமா என்று கேட்டார். உடனே என் மகனுக்கு போன் செய்து ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு வரச் சொன்னேன். என் மகனுக்கு அஜித் ஊக்கம் அளித்தார். அவர் நல்லா வருவார். அதற்கு நாம் ஏதாவது செய்யலாம் என்றார் அஜித். நான் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் வேறு எந்த நடிகரும் அஜித் போன்று அந்த வார்த்தையை சொல்லவில்லை.
ரசிகன்
என் கார் டிரைவர் உங்களின் தீவிர ரசிகர் என்று நான் அஜித்திடம் கூறினேன். அஜித் என் டிரைவரை அழைத்து நாம் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டார். என் டிரைவர் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். சார், எனக்கு ஒரு மாத சம்பளம் வேண்டாம், இந்த புகைப்படம் போதும் என்றார் என் டிரைவர் என டெல்லி கணேஷ் தெரிவித்தார்.