சுஷாந்த் சிங் ராஜ்புத் பயோபிக்… டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
டெல்லி : மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வர உள்ளது.
நய்யே தி ஐஸ்டிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சுஷாந்த் சிங்கின் கதாபாத்திரத்தில் ஜூபர் கான் நடித்துள்ளார்.
ஜூன்11 ந் தேதி இத்திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் இத்திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது.

டோனி வாழ்க்கை வரலாறு
டோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாழ்க்கை வரலாறு
இந்நிலையில் அவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நய்யே தி ஐஸ்டிஸ் என்ற பெயரில் திலீப் குலாட்டி இப்படத்தை இயக்கி உள்ளார். ஜூன்11ந் தேதி இத்திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சுஷாந்தின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் இந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெயருக்கு கலங்கமின்றி
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது பட தயாரிப்பாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் படத்தையோ, அவரது பெயரையோ படத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று கூறினார். மேலும் சுஷாந்த் சிங்கின் பெயருக்கு கலங்கம் வரும் படி எந்த காட்சிகளும்அப்படத்தில் இல்லை என்று வாதிட்டார்.

இடைக்காலத் தடை
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சீவ் நருலா இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்கும் வரை திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனரிடம் கேட்டுக்கொண்டது.இதையடுத்து, இப்படத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடைவிதித்துள்ளது.


Click it and Unblock the Notifications











