எல்லாம் போச்சு.. ரிலீஸ் ஆகாத வீர தீர சூரன்.. 4 வாரத்திற்கு தடை போட்ட டெல்லி உயர்நீதிமன்றம்!
டெல்லி: விக்ரம் ரசிகர்களுக்கு இந்த நாள் இவ்வளவு ஏமாற்றமாக அமையும் என கொஞ்சம் கூட யோசித்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் விக்ரம் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, ரிலீஸ்க்கு முன்னர் வழக்குகள் வருவதும், அது உடனே தீர்க்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அப்படித்தான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் படத்தின் ரிலீஸில் இந்த வழக்கு மிகப்பெரிய பிரச்னையைக் கொண்டு வந்துவிடும் என யாரும் நினைக்கவில்லை. படத்தை நான்கு வார காலத்திற்கு ரிலீஸ் செய்ய தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள்.

இதனிடையே, இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வட்டாரங்கள் கூறுகையில், ஐ.வி.ஒய் என்டர்டையின்மன்ட் நிறுவனம், எச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து பேசி சமூகத் தீர்வு காண திட்டமிட்டுள்ளன. மேலும் நீதிபதியிடம் இது தொடர்பாக முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது இன்று மாலை 3 மணிக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் இன்று மாலை 3 மணிக்குள் படத்தின் ரிலீஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்றால், படத்தின் ரிலீஸ் அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போக அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் ஆகாமல் ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மேலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பிரச்னை என்னவென்றால், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை உறுதி செய்யாமல், படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதாக கூறி, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒரு நிறுவனமான, B4U என்ற தயாரிப்பு நிறுவனம், படத்தின் தியேட்டர் ரிலீஸ்க்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. அதாவது B4U நிறுவனம், படத்தில் முதலீடு செய்த பணத்திற்காக, படத்தின் ஓடிடி உரிமத்தை மொத்தமாக படத்தின் தயாரிப்பாளரராஹா ஷிபு ரியா எழுதிக் கொடுத்துள்ளார். இப்படியான நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை முடிவு செய்வதற்கு முன்னரே, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து, அதற்கான பணிகளையும் செய்துள்ளார்கள், ஜெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தினர். இப்படியான நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தீர்மானிக்காமல், தியேட்டர் ரிலீஸ் தேதியை தீர்மானித்ததால், B4U நிறுவனத்திற்கு 50 சதவீதத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் எனவே, படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியைத் தீர்மானிக்காமல், படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என அந்த நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது.
ஏற்கனவே கூறியதைப்போல், மாலை 3 மணிக்கு இரு தரப்பினரும் அமர்ந்து பேசி, எடுக்கும் முடிவு சுமூகமானதாக அமைந்தால், படம் இன்றே ரிலீஸ் ஆகும். ஆனால், அதில் எதாவது குளறுபடி ஏற்பட்டால், படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும். எப்படியும் படம் ஒரு மாத காலத்திற்கு ரிலீஸ் ஆகாது. மேலும் படத்தை இன்று பார்க்க ஆவலாக லட்சக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் தியேட்டருக்கு படம் பார்க்க ஆவலாக வந்தனர். ஆனால் படம் ரிலீஸ் ஆகாததால் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











