பெரிய பாயே மாட்டிக்கினாரே.. காப்பி ரைட்ஸ் வழக்கு.. ஏ.ஆர். ரஹ்மான் 2 கோடி அபராதம் கட்டணுமா? ஏன்?
டெல்லி: இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் என்றால் அது பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பொன்னியின் செல்வன் பாகம் 2 ஆகிய படங்கள் தான். இந்த படத்தில் தமிழ் திரையுலகின் பெரும்பாலான நட்சத்திரங்கள் நடித்திருந்தர்கள். லைகா மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு தேசிய விருதுகள் கிடைத்தது. படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற ’வீரா ராஜா வீரா’ பாடலை முறையான அனுமதி இன்றி பயன்படுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்பொது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, 'வீரா ராஜா வீரா’ பாடலைப் பயன்படுத்தியதற்காக, ரூபாய் 2 கோடி அபராதமாக செலுத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாடகர் ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் ரூபாய் 2 கோடியைச் செலுத்தவும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காப்பிரைட்ஸ் விவகாரத்தில் பலரும் இளையராஜாவை குற்றம் சொல்லிக் கொண்டு இருந்த நிலையில், தற்போது ஏ.ஆர். ரகுமான் காப்பிரைட்ஸ் பிரச்னையில் மாட்டிக் கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படம் கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் ரிலிஸ் ஆனது. இந்த படத்தின் கதை அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளி வந்தது. இதில் முதல் பாகம் 2022ஆம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டு வெளிவந்தது. பொன்னியின் செல்வன் படத்தை லைகா புரெடக்ஷன்ஸ் நிறுவனமும் மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தது.
படக்குழு: பொன்னியின் செல்வன் இரண்டு பாகத்திலும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடித்து பாராட்டுகளைக் குவித்தார். பொன்னியின் செல்வன் படம் தான் இதுவரை தமிழில் உருவான படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாக்கப்பட்ட படம். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்தார். அதேபோல் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்தார்.

உத்தரவு: பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு மொத்தம் நான்கு தேசிய விருதுகள் கிடைத்தது. சிறந்த தமிழ் படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இசை வடிவமைப்பு என மொத்தம் நான்கு விருதுகளை இந்த படம் வென்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ள பாடலான ' வீரா ராஜா வீரா’ பாடலானது தனது தாத்தா மற்றும் தந்தை உருவாக்கிய சிவா ஸ்துதி பாடலைப் போல இருப்பதாக பாடகர் ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஏ.ஆர். ரகுமான் ரூபாய் 2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



Click it and Unblock the Notifications











