சன்னி லியோனால் வந்த வினை: தூக்கம், நிம்மதியை இழந்த வாலிபர்
டெல்லி: டெல்லியை சேர்ந்த ஒருவர் நடிகை சன்னி லியோனால் நிம்மதியை இழந்து தவிக்கிறார்.
திலிஜித் தோசஞ்ச் போலீஸ் அதிகாரியாக நடித்த அர்ஜுன் பாட்டியாலா பஞ்சாபி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அந்த படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடிவிட்டு திலிஜித்திடம் தனது செல்போன் எண்ணை அளித்தார்.

அந்த எண் நிஜமாகவே சன்னி லியோனின் செல்போன் எண் என நினைத்து ரசிகர்கள் போன் செய்தனர். நிஜத்தில் அந்த எண் வட டெல்லியில் உள்ள ப்ரீதம்புரா பகுதியை சேர்ந்த புனீத் அகர்வால்(26) உடையது.
படம் ரிலீஸானதில் இருந்து பலரும் புனீத் அகர்வாலுக்கு போன் செய்து சன்னி லியோனுடன் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சிலரோ சில கேவலமான சேவை தேவை என்று கேட்டுள்ளனர்.
சுமார் 500 கால்கள் வந்த பிறகு புனீத் பொறுமையை இழந்தார். இதையடுத்து அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் மவுர்யா என்கிளேவ் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். ஆனால் அவரின் புகார் தொடர்பாக போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
புனீத்தின் போன் விடாமல் அடித்துக் கொண்டே இருப்பதால் அவர் தூக்கம் மற்றும் நிம்மதியை இழந்து தவிக்கிறார். செல்போன் எண் விவகாரம் தொடர்பாக புனீத் நீதிமன்றத்தின் உதவியை நாட முடிவு செய்துள்ளார்.
புனீத் அகர்வால் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதுடன் சொந்தமாக சிறுதொழிலும் செய்து வருகிறார். அவர் கடந்த 12 ஆண்டுகளாக இந்த செல்போன் எண்ணை தான் பயன்படுத்தி வருகிறார். அதனால் தற்போது எண்ணை மாற்றினால் பிசினஸ் பாதிக்கும் என்கிறார் அவர்.
முதல் அழைப்பு வெள்ளிக்கிழமை மதியம் வந்துள்ளது. போன் செய்தவர் சன்னி லியோனுடன் பேச வேண்டும் என்று புனீத்திடம் தெரிவித்துள்ளார். யாரோ ராங் நம்பர் என்று நினைத்துள்ளார் அவர். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து கால்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்தியா மட்டும் அல்ல இந்தோனேசியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் அவருக்கு போன் கால் வந்துள்ளது.
அப்படி கால் செய்தவர்களில் ஒருவர் தான் பஞ்சாபி படத்தில் தனது செல்போன் எண் என்று சன்னி லியோன் இந்த எண்ணை அளித்ததாக புனீத்திடம் தெரிவிக்க அதன் பிறகே அவருக்கு அனைத்தும் புரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications











