Don't Miss!
- Finance
குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்.... எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!
- News
ஆபரேசன் தாமரை! நேற்று பீகார்.. அடுத்து புதுச்சேரி - பகீர் கிளப்பும் எதிர்க்கட்சித் தலைவர்
- Lifestyle
ஆண்களைப் பற்றிய இந்த ரகசியங்களை பெண்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாதாம்... அது என்னென்ன தெரியுமா?
- Sports
"நீங்களே இப்படி செய்யலாமா".. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
“அன்பே வா“ தொடரின் மூலம்..சின்னத்திரையில் தடம் பதிக்கும்.. குரங்குபொம்மை நாயகி !
சென்னை : சன் டிவியில் வரும் நவம்பர் 2ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது அன்பே வா மெகாத்தொடர்,
பெரியத்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வரும் பல நடிகைகள் போல புது வரவான குரங்கு பொம்மை கதாநாயகியும் இந்த தொடரின் மூலம் களம் இறங்குகிறார். குடும்பப் பின்னணியில், அழகான காதலை மையமாக வைத்து, " அன்பே வா " கதை அமைக்கப்பட்டுள்ளது. வருண்- பூமிகா இருவரும் முற்றிலும் மாறுபட்ட இரு வேறு எதிரெதிர் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.
நாயகி பூமிகா , மிகவும் பொறுப்பான, தன்னம்பிக்கையுள்ளவள். கிராமத்து சூழலில் வளர்ந்த பாரம்பரியம் மிக்க பெண். நாயகன் வருண் , பணக்கார சூழலில் வளர்ந்த ஆடம்பரமான இளைஞன்.
அது ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.. மாஸ்டர் ஹீரோயினிடம் மன்றாடும் ரசிகர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?

காதலையும் கண்டுபிடித்து
விதியின் சந்தர்ப்பவசத்தால் இருவரும் ஒரே சூழலில் வாழ நேரிடுகிறது. இருவரும் அவர்களுக்குள் இருக்கும் உண்மையான அன்பையும் காதலையும் கண்டுபிடித்து, திருமணத்தில் இணைவார்களா என்பது அன்பே வா கதைச்சுருக்கம்.

டீ ஆர் பி அதிகம்
விராட் நாயகனாகவும், குரங்கு பொம்மை பட நாயகி டெல்னாடேவிஸ் பெரியத்திரையிலிருந்து,சின்னத்திரைக்கு அன்பே வா எனும் புதிய மெகாத்தொடர் மூலம், கதாநாயகியாக அறிமுகமாகிறார். பல விதமான உடைகள் அணிந்து வண்ணமயமயாக போஸ் கொடுப்பதும் முன்னணி சீரியல் நடிகைககுக்கு சரியான போட்டியாக டீ ஆர் பி அதிகம் வர வித்யாசமான பல முயற்சிகள் நடந்து வருகிறது .

பிர்லாபோஸ்
வினயா ப்ரசாத், ஆனந்த், கன்யா, ரேஷ்மா, கெளசல்யா செந்தாமரை, பிர்லாபோஸ், துரை ஆகியோர் நடித்துள்ளனர். சரிகமா இந்தியா லிட் சார்பாக, இந்த ப்ராஜெக்ட் ஒரு பக்காவான என்டெர்டைன்மெண்டாக இருக்கும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர் .

புதிய யுக்திகளை
லாக் டவுன் சமயத்தில் பல புதிய சீரியல்கள் பல புதிய கேம் ஷோகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் , இப்பொழுது பல விதமான புதிய யுக்திகளை கையாண்டு நவீன முறையில் ஷூட்டிங் நடத்துகின்றனர் சின்ன திறையினர் . ஒரு பக்கம் ஓ டீ டீ விஸ்வரூபம் எடுத்தாலும் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் குறைந்தபாடு இல்லை.

எதார்த்தமான நடிப்பு
அன்பே வா மெகாத்தொடரின் பலம் என்னவென்று கேட்டால் பொருத்தமான கதாபாத்திரங்களுக்கு கச்சிதமான நடிகர்களை தேர்ந்து எடுத்து சரியாக பயன் படுத்து திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டுவது தான். குரங்கு பொம்மை பட நாயகி டெல்னாடேவிஸ் இந்த சீரியலில் நடிப்பது கூடுதல் பலம் என்ரே பலரும் சொல்லி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் குரங்கு பொம்மை படத்தில் அவர் வெளிபடுத்திய எதார்த்தமான நடிப்பு தான்.

ஜொலிப்பார்
டெல்னாடேவிஸ் கண்டிப்பாக சின்னத்திரையிலும் ஜொலிப்பார் என்று பலர் நம்புவது மட்டும் இல்லாமல் கண்டிப்பாக மிக பெரிய அளவில் பல சீரியல்கள் அவருக்கு வாய்ப்பு கதவை தட்டும் என்றும் தெரிவிக்கின்றனர் . இப்பொழுதே நெடிஸின்ஸ் பலர் மீம்ஸ் தயார் செய்து ப்ரமோட் செய்ய ஆரம்பித்து உள்ளனர் . பொறுத்து இருந்து பார்ப்போம் டெல்னாவின் தெறிக்க விடும் காட்சிகளை.