விஜய் படம், டிரைலர் எல்லாத்துக்கும் தடை போடுங்க.. தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை வைத்த தேசிய கட்சி!
சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் இந்த கோடை வெயிலைக் காட்டிலும் சூடாகவே உள்ளது. நாளுக்கு நாள் மிகவும் பரபரப்பாக அரங்கேறும் பல்வேறு அரசியல் சம்பவங்கள் மொத்த இந்தியாவையும் தமிழ்நாட்டை நோக்கி கவனம் செலுத்த வைத்துள்ளது. வழக்கமாகவே தமிழ்நாடு தேர்தல் களம் மிகவும் சவாலானது. ஆனால் இம்முறை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் களமிறங்கி உள்ளதால் களம் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. இப்படி இருக்கையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சையது பாபு தேர்தல் கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நடிகர் விஜய்யின் படங்கள், பாடல்கள், டிரைலர் என எதுவுமே தியேட்டர், சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் என எதிலும், வாக்குப்பதிவு நடைபெற்று முடியும் வரை ஒளிபரப்பக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை முன் வைத்திருந்தாலும், கடந்த காலங்களில் நடிகர் எம்.ஜி.ஆர், நடிகை ஜெயலலிதா, நடிகர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் இது போன்ற தடை என்பது விதிக்கப்பட்டதில்லை. மேலும் ஒரு கட்சியின் பெயர், கட்சி சின்னம் உள்ளிட்டவை குறித்த பிரச்சார நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய படத்திற்கு தடை விதிக்கச் சொல்லி கோரிக்கை வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜன நாயகன் படத்திற்கு தேர்தல் நாள் வரைக்கும் ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கக் கூடாது என்று கூறப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











