நயன்தாராவின் இயக்குநருக்கு திருமணம்.. மணமகள் யார்? வேகமாக பரவும் புகைப்படங்கள்!
சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடைசியாக வெளியான படம், டிமான்ட்டி காலணி. இந்தப் படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகி பெரும் வெற்றிப் படமாக மாறியது. தற்போது டிமான்ட்டி காலணி 3 படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இப்படியான நிலையில் அவருக்கு திருமணம் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில், டிமான்ட்டி காலணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர், அஜய் ஞானமுத்து. இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதுவரை வந்த பேய் படங்களிலேயே இவரது டிமான்ட்டி காலணி படம் மொத்தமும் வித்தியாசமாக இருந்தது. தனது முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அதன் பின்னர், நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக், அதர்வா என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து, இமைக்கா நொடிகள் என்ற படத்தினை இயக்கினார். இந்தப் படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக கதைக்குத் தேவையான க்ரைம் த்ரில்லர், காதல், எமோஷன் என எல்லா ஏரியாக்களிலும் சிக்ஸர் அடித்திருந்தார்.
கோப்ரா: அதன் பின்னர் விக்ரம் உடன் இணைந்து, கோப்ரா படத்தினை எடுத்தார். இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஹாட்ரிக் ஹிட் அடிப்பார் என நினைத்துக் கொண்டு இருந்த போது கோப்ரா படம் சொதப்பியது. இந்தப் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கடும் தோல்வியைச் சந்தித்தது.
கம்பேக்: இந்தப் படம் படு தோல்வியைச் சந்தித்த பின்னர், டிமான்ட்டி காலணி 2 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருபடத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதால், ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகுமா என்று பல கேள்விகள் இருந்தது. ஆனால் அவர் அதற்கும் தனது இரண்டாம் பாகத்தில் ஒரு காட்சி வைத்து அசத்தினார். படம் தாருமாறாக ஓடி பெரும் வெற்றிப் படமாக மாறியது.
திருமணம்: இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் மூன்றாம் பாகத்திற்கான லீடு வைத்திருந்தார். தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இப்படியான நிலையில் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது காதலியை பெற்றோர்களில் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. விஷயத்தைக் கேள்விப்பட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











