கடற்கரையில் ரொமான்டிக் நிச்சயதார்த்தம்.. லிப் லாக் முத்தத்துடன் மோதிரம் மாற்றிய பிரபல பாடகி!

கலிபோர்னியா: பிரபல அமெரிக்க பாடகி, நடிகை, பாடலாசிரியர், இன்ஸ்டாகிராம் மாடல் என பன்முகத்தன்மை கொண்ட டெமி லொவேட்டா தனது காதலருடன் நிச்சயம் செய்துக் கொண்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு, தங்கள் உறவை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளனர்.

கடற்கரையில் இருவர் மட்டுமே பங்கேற்ற இந்த ரொமான்டிக் நிச்சயதார்த்த புகைப்படங்கள் உலகளவில் வைரலாகி வருகின்றன.

88 மில்லியன் ரசிகர்கள்

88 மில்லியன் ரசிகர்கள்

அமெரிக்காவின் டாப் பாடகியான டெமி லொவேட்டாவுக்கு உலகளவில் 88.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். க்ளீ, சோனி வித் எ சான்ஸ், கேம்ப் ராக், தி எக்ஸ் ஃபேக்டர், தி டெமி அண்ட் செலினா ஷோ, ஸ்மர்ஃப்ஸ், சிம்ப்ளி காம்ப்ளிகேட்டட், ஜோனஸ் பிரதர்ஸ் என படங்கள், ஆல்பங்கள் மற்றும் டிவி ஷோக்கள் என சர்வதேச அளவில் கலக்கி வரும் பிரபலம் தான் டெமி லொவேட்டா.

ரொமான்டிக் என்கேஜ்மென்ட்

ரொமான்டிக் என்கேஜ்மென்ட்

சமீபத்தில் தனது தோழியும் க்ளீ ஸ்டார் நடிகையுமான நயா ரிவேராவின் இழப்புக்கு மிகவும் வருந்தி பதிவுகளையும் பிரார்த்தனைகளை செய்திருந்த டெமி லொவேட்டா, தற்போது தனது காதலர் மேக்ஸ் எரிச்சுடன் கலிபோர்னியாவின் மாலிபு கடற்கரையில், மோதிரத்தை மாற்றி அவரை தனது வாழ்க்கைத் துணையாக உறுதி செய்துள்ளார்.

லிப் லாக்

லிப் லாக்

கடந்த மார்ச் மாதம் டெமி லொவேட்டாவும், மேக்ஸ் எரிச்சும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து, தற்போது மோதிரம் மாற்றிக் கொண்டு, லிப் லாக் அடிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அப்பாவின் வார்த்தைகள்

அப்பாவின் வார்த்தைகள்

மேலும், அந்த புகைப்படங்களுடன், நீண்ட ஒரு பதிவையும் பாடகி டெமி லொவேட்டா பதிவு செய்துள்ளார். அதில், எப்போதும், தனது தந்தை தன்னை லிட்டில் பார்ட்னர் என்று செல்லமாக அழைப்பார். இந்நிலையில், எனக்கான லைஃப் பார்ட்னரே தற்போது கிடைத்து இருக்கிறார். அவரது குரலில் இப்போது என் அப்பாவின் வார்த்தைகளை கேட்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பார்த்த நொடியிலேயே

பார்த்த நொடியிலேயே

மேலும், மேக்ஸ் எரிச், உன்னை பார்த்த நொடியிலேயே உன் மீது காதலில் விழுந்து விட்டேன். இந்த உறவு கை கூடும் என்று எதிர்பார்த்தேன். தற்போது அந்த கனவு நிறைவேறி விட்டது. எனது பெற்றோர்களை விட என்னை அன் கண்டிஷனலாக இதுவரை யாரும் காதலிக்க முடியாது என்று நினைத்து இருந்தேன் அந்த நினைவை நீ மாற்றியுள்ளாய் என காதல் வழிய பதிவிட்டு இருக்கிறார். பதிலுக்கு மேக்ஸும் தனது இன்ஸ்டா பக்கத்தில் டெமியை வர்ணித்து நீண்ட நாட்கள் நம் உறவு நீடிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X