மண்டையில கொண்டை.. கையில விசிறி.. நான் இப்போ சீன தேசத்து ராணி.. பிகினியில் கலக்கும் ரோஸ் பேபி!
ஸ்பெயின்: இங்கிலாந்து நடிகையும் சர்வதேச சூப்பர் மாடலும் ஆன டெமி ரோஸ், சீன தேசத்து ஃபேஷன் ஸ்டைலில் அணிந்து இருக்கும் பிகினி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது.
Recommended Video
14 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டிருக்கும் இவர், தற்போது இபிசா கடற்கரை தீவில் ஜாலியா தனது சுற்றுலாவையும் மாடலிங் வேலையையும் பார்த்து வருகிறார்.
இ-பாஸ் தமிழ்நாட்டில் ரத்தாகிறதா...சென்னைக்கு இ பாஸ் தேவையா...அன் லாக் 4.0 எப்போது?

உள்ளிருந்தே வெளியே
கருப்பு மோனோகினியில் கிறங்கடித்த இந்த கட்டழகி அடுத்ததாக பனை மர இலைகள் ப்ரின்ட் செய்த பச்சை நிற பிகினியை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அதில், உள்ளிருந்து வெளியே பிரகாசமாக ஜொலிக்க வேண்டும் என இவர் கொடுத்துள்ள கேப்ஷனுக்கு பல ஹாலிவுட் பிரபலங்கள், லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் தட்டி வருகின்றனர்.

ஆடை ஏதும் அணியாமல்
சமீபத்தில், பாறை மீது ஆடை ஏதும் அணியாமல் சிங்கிள் பீஸ் மட்டுமே அணிந்து கொண்டு நடிகை டெமி ரோஸ் வெளியிட்ட அந்த ஹாட் புகைப்படம் 5 லட்சத்துக்கும் மேல் லைக்குகளை அள்ளி இவரது ரசிகர்களின் சமீபத்திய ஹாட் ஃபேவரைட் புகைப்படமாகவும் மாறி உள்ளது. வனப்பின் வனமாக காட்சி தரும் இந்த எண்ட் டைம் ஸ்டோரி நடிகையின் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்கள் உலகளவில் வைரலாகி வருகின்றன.

சீன தேசத்து ராணி
புதிய புதிய ஃபேஷன் உடைகளை விளம்பரப்படுத்தி வரும் நடிகை டெமி ரோஸ், தற்போது, சீன தேசத்து ராணியாக போஸ் கொடுத்து எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகி வருகின்றன. டெனிம் ஜீன்ஸ் பிகினி அணிந்து கொண்டு, கையில் சீன தேசத்து ஸ்டைல் விசிறி மற்றும் கொண்டை போட்டுக் கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.

சைனா பொம்மை
அதே உடையில் எடுக்கப்பட்ட வித விதமான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு, உங்களுக்கு பிடித்த கேரக்டர் எது என கேட்க, முதல் போட்டோ, இரண்டாவது போட்டோ என ரசிகர்களும் பிரபலங்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர், அப்படியே சைனா பொம்மை போல இருக்கீங்க, என வர்ணித்தும் வழிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











