அள்ளுது.. கடல் தேவதையே நீங்க தான்.. சொகுசு படகில்.. உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த ரோஸ் பேபி!
ஸ்பெயின்: இபிசியா தீவில் தனது சுற்றுலாவை என்ஜாய் பண்ணி வரும் பிரபல ஹாட் மாடல் டெமி ரோஸின் பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து ஹாலிவுட் நடிகையாகவே வேண்டும் என லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு குடிபுகுந்த இந்த இளம் தேவதை, தற்போது ஸ்பெயின் நாட்டில் இன்ப சுற்றுலா செய்து வருகிறார்.
பிகினி உடைகளிலும், அரை நிர்வாணமாகவும் புகைப்படங்களை வெளியிட்டு, சர்வதேச ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக மாற்றி உள்ளார்.

ஏலியன் போல
சமீபத்தில், இந்த உலகமே தேவையில்லை, நான் வேற்று கிரகத்துக்கு போறேன், என் கூட யாரெல்லாம் வரீங்கன்னு ஏலியன் போன்ற உடையை அணிந்து கொண்டு இவர் போட்டோ போஸ்ட் எக்கச்சக்க ரசிகர்களை ஈர்த்தது. கொரோனா உள்ளிட்ட தாக்குதல்களில் உலகமே பயங்கரமாக மாறி வரும் சூழலில் இவர், அப்படி தெரிவித்து இருந்தார்.

சட்டையை கழட்டி
பேரழகியாக திகழும் இந்த இளம் இன்ஸ்டாகிராம் மாடல், எண்ட் டைம் எனும் படத்தில் நடித்துள்ளார். சட்டையை கழட்டி தனது முன்னழகு முழுவதும் தெரியும் படி பல முறை பல விதமான போஸ்களை கொடுத்து இவர் வெளியிட்ட போட்டோக்கள் எல்லாம் சர்வதேச கவனத்தை ஈர்த்து இணையத்தை சூடாக்கின.

ஊர் சுற்ற பிடிக்கும்
இங்கிலாந்தின் ஹாட் மாடலான இவர், ஜேம்ஸ் பாண்ட் படத்தில் பாண்ட் கேர்ளாக நடிக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அதற்காக, இங்கிலாந்தை விட்டு, லாஸ் ஏஞ்சல்ஸில் குடிபுகுந்த இவர், பல ஹாலிவுட் வாய்ப்புகளையும் தேடி வருகிறார். சுற்றுலா பிரியையான இவர், சமீபத்தில் பனி மலைக்கு அருகே, இப்படி ஒரு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு கொடுத்த போஸ் ரசிகர்களை உறைய வைத்தது.

கடல் தேவதை
லாக்டவுன் காரணத்தால் வீட்டிலேயே இருந்த அவர், தற்போது ஸ்பெயின் நாட்டில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இபிசியா தீவில் டூர் அடித்து வருகிறார். சொகுசு படகில் கவர்ச்சி பிகினி அணிந்து ஒய்யாரமாக அமர்ந்து கடல் தேவதை போல அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.

கிளிட்டர் உடை
சிகப்பு நிற கிளிட்டர் உடையை அணிந்தபடி, சொகுசு ரெசார்ட்டில் தனது சுற்றுலாவை களித்து வரும் இவர், தொடர்ந்து ஏகப்பட்ட புகைப்படங்களையும், விளம்பர நிறுவனங்களுக்காகவும் போஸ் கொடுத்து கல்லா கட்டி வருகிறார். ஹாட் இன்ஸ்டாகிராம் மாடலான இவர் பதிவிடும் போட்டோக்களெல்லாம் லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளுது.


Click it and Unblock the Notifications











