ரொம்ப நல்ல விஷயம்.. தற்கொலை முயற்சிக்கு எதிராக விழிப்புணர்வு வீடியோ.. டெமி ரோஸின் அடுத்த அதிரடி!
ஸ்பெயின்: உலக தற்கொலை தடுப்பு தினம் வருவதை முன்னிட்டு, விழிப்புணர்வு வீடியோவை எடுக்க பிரபல மாடல் அழகி டெமி ரோஸ் முடிவு செய்துள்ளார்.
உலகளவில் மன அழுத்தம் காரணமாக பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சமீபத்தில், சுஷாந்த் ராஜ்புத், திஷா சலியான் உள்ளிட்ட பல பிரபலங்களின் தற்கொலையையும் நாம் பார்த்து வருகிறோம். அதில் சில வில்லங்கமும் உள்ளது வேறு கதை.

இன்ஸ்டா அழகி
தனது 14 மில்லியன் ரசிகர்களுக்காக உச்சகட்ட கவர்ச்சியை காட்டி கிறங்கடித்து வருகிறார் நடிகையும் மாடல் அழகியுமான டெமி ரோஸ். இங்கிலாந்தை சேர்ந்த இவர், ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் குடி புகுந்துள்ளார். தற்போது, ஸ்பெயினின் இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வருகிறார்.

சமூக அக்கறை
பிகினியிலும், அரை நிர்வாணமாகவும் புகைப்படங்களை பதிவிட்டு தெறிக்கவிடுவது மட்டுமின்றி, சமூக அக்கறையும் இவருக்கு அதிகமாகவே உண்டு. சமீபத்தில், அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இன வாதத்திற்கு எதிராக தனது கருத்துக்களையும் இவர் பதிவிட்டு இருந்தார்.

பிரேக்கப்
இந்த எண்ட் டைம் நடிகை டெமி ரோஸ், கடந்த 2017ம் ஆண்டு பிரபல டிஜேவான கிறிஸ் மார்டினெஸ் உடன் டேட்டிங் செய்து வந்தார். இரண்டு ஆண்டுகள் நீடித்த இவர்களது காதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரேக்கப்பில் போய் முடிந்தது. சமீபத்தில், ஆண்களே தேவையில்லை என பெண் தோழி ஒருவருடன் நெருக்கமாக புகைப்படத்தை வெளியிட்டு ஹாலிவுட்டை அதிர வைத்து இருந்தார்.

தற்கொலைக்கு எதிராக
இந்நிலையில், தனது கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து தான் வெளியே வந்து ரசிகர்களுக்கு செப்டம்பர் மாதம் சர்ப்ரைஸ் கொடுக்க வீடியோ ஒன்றை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், அந்த வீடியோ, தற்கொலைக்கு தூண்டப்படும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் விதமாக அமையும் என்று, சில நண்பர்களுடன் இணைந்து அதை செய்யப் போவதாகவும் இந்த ஹாட் தேவதை அறிவித்துள்ளார்.

ரொம்ப நல்ல விஷயம்
உங்க கிட்ட இருந்து அடுத்து என்ன ஹாட் போட்டோ வரப்போகுது என காத்துக் கொண்டிருந்த எங்களுக்கு, நீங்க போட்ட இந்த பதிவே ஒரு சர்ப்ரைஸ் தான் என்றும், ரொம்ப நல்ல விஷயம் செய்ய முடிவு செஞ்சிருக்கீங்க, உங்களுக்கு இருக்கும் புகழ் காரணமாக அந்த வீடியோ நிச்சயம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் மனங்களை மாற்ற உதவும் என்றும், சிறப்பா பண்ணுங்க என்றும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











