இது என்னடா ஜீன்ஸ்.. அந்த இடத்துல அப்படி காத்து வாங்குதே.. இனிமே ஆப்பிரிக்காவில் தான் டெமி டூர் போல!
ஆப்பிரிக்கா: பிரபல இங்கிலாந்து நடிகையான டெமி ரோஸ், வித்தியாசமான ஜீன்ஸ் அணிந்து போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
மாடலிங் துறையில் கலக்கி வரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 15.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
ஸ்பெயின், மாலத்தீவு என சுற்றுலா செய்து வந்த ரோஸ் பேபி, இப்போ ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார்.

எப்படிதான் சாத்தியமோ
பிரபல இங்கிலாந்து நடிகையான டெமி ரோஸ், சர்வதேச இன்ஸ்டாகிராம் மாடலாக ரசிகர்கள் மனங்களை கவர்ந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக பக்கத்து ஊர்களுக்கு கூட சுற்றுலா செல்ல மக்கள் பயந்து வரும் நிலையில், ஸ்பெயின் நாட்டின் இபிசா கடற்கரை, மாலத்தீவு என டூர் அடித்து வரும் இபிசா தற்போது ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார்.

மாடலிங் மங்கை
மாடலிங்கில் அதிக ஆர்வம் உள்ள இவர், ஏகப்பட்ட பிரபல டாப் பிராண்ட் உள்ளாடை நிறுவனங்களுக்கும் ஆடை நிறுவனங்களுக்கும் விளம்பர மாடலாக பணியாற்றி வருகிறார். புதுவிதமான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி கடலாக ரசிகர்களை திக்குமுக்காட செய்வதில் தலைவி வேற ரகம்.

ஸ்டைல் ஐகான்
25 வயது நிரம்பிய இந்த ஹைடெக் ஹாட் மாடல் ஸ்டைல் ஐகானாக இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறார். ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று, சில மாதங்கள் அங்கேயே தங்கி சுற்றுலா செய்வது மட்டுமின்றி, பிரபல நிறுவனங்களின் உடைகளையும் விளம்பரப்படுத்தி வருகிறார். ஏகப்பட்ட பிகினி மாடல்களை தனது ரசிகர்களுக்கு இவர் அறிமுகப்படுத்தி உள்ளார்.

என்ன ஜீன்ஸ் இது
உள்ளூர் நடிகைகளே கிழிந்த ஜீன்ஸ் பேன்ட்டை போட்டு சமூக வலைதளங்களை தெறிக்கவிடும் நிலையில், சர்வதேச மாடல் அழகியான டெமி ரோஸ், தற்போது அணிந்திருக்கும் வித்தியாசமான ஜீன்ஸ் பேன்ட் ஒட்டுமொத்த ஃபேஷன் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மாலத்தீவில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளதையும் தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார் டெமி.

நல்லா காத்து வாங்குது
உள்ளாடையும் ஜீன்ஸும் ஒன்றாக போட்டது போல தொடைப் பகுதியில் நல்லா கிழிச்சிவிட்டு வித்தியாசமான மாடல் ஜீன்ஸ் பேன்ட்டை அணிந்துள்ள டெமி ரோஸின் அட்டகாசமான அழகை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். சுமார் 4 லட்சம் பேர் டெமியின் அந்த புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளனர்.

டாம்ப் ரைடர்
ஆப்பிரிக்காவின் டான்ஸானியா இடத்தில் உள்ள செரங்கெட்டி தேசிய பூங்காவில் சுற்றுலா செய்து வரும் டெமி ரோஸ், ஏஞ்சலினா ஜோலி நடித்த டாம்ப் ரைடர் படத்தின் லாரா கிராஃப்ட் போலவே இருக்கிறார் என ஏகப்பட்ட பிரபலங்கள் கமெண்ட் செய்து டெமி ரோஸை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











