Demonte Colony 3: ரிலீசுக்கு முன்பே கோடிகளைக் குவிக்கும் டிமாண்டி காலனி 3.. இத்தனை கோடியா?
சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய 'டிமாண்டி காலனி' இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலையும் அள்ளியது. இரண்டாம் பாகத்தின் வெற்றியைத்ர தொடர்ந்து 'டிமாண்டி காலனி 3' படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே பல கோடிக்கு விற்பனையாகி உள்ளது.'
திகிலூட்டும் படமான டிமாண்டி காலனி படத்தை 2015ம் ஆண்டு வெளியானது. இப்படத்தல் அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். ஒரே ஒரு இரவில் வீட்டிற்குள் நடக்கும் பேய்யின் அட்டகாசமும், பயமும் ரசிகளை திகைப்பில் ஆழ்த்தியது. டிமாண்டி காலனி படம் வெளியான போது, உண்மையிலேயே இதுபோன்று ஒரு இடம் இருக்காக என பலர் ஆராய்ச்சியே செய்தனர்.

டிமாண்டி காலனி 2: முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து,7 ஆண்டுகளுக்கு பின் இரண்டாம் பாகம் வெளியானது. அஜய் ஞானமுத்துவே டிமாண்டி காலனி இரண்டாம் பாகத்தை இயக்கினார். அதில், அருள்நிதி, அருண் பாண்டியன், பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவி சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வழக்கமான பேய் படங்களை போல் இல்லாமல் புதுவித கதைக்கலத்துடன் இருந்து. அதாவது, முதல் பாகத்தில் டிமாண்டி காலனியில் இருந்த செயினை எடுத்த அனைவரும் இறந்துவிடுவது போல கதை முடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில், இறந்ததாக கருதப்பட்ட அருள் நிதி மருத்துவமனையில் கோமாவில் இருக்கிறார். அவரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு ஒன்று உருவாகிறது. அதற்காக அருள்நிதியின் சகோதரர், பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன் ஆகியோர் போராடுகின்றனர். இதில் அருள்நிதி காப்பாற்றப்பட, அவரின் சகோதரர் கோமாவிற்கு சென்றுவிடுவது போல இரண்டாம் பாகம் முடிக்கப்பட்டு, மூன்றாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டு இருந்தது.
டிமாண்டி காலனி 3: இதனால், டிமாண்டி காலனி மூன்றாம் பாகம் எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், டிமாண்டி காலனி 3 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கோடை விடுமுறைக்கு தியேட்டரில் படத்தை தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில், இப்படம் வெளியீட்டு முன்பே மகத்தான சாதனையை படைத்துள்ளது. அதாவது டிமாண்டி காலனி 3 படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதுவும் ரூ. 50 கோடிக்கு படத்தை வாங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். மிகப்பெரிய தொகைக்கு படம் விற்பனையாகி உள்ளதால், தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் உள்ளது.


Click it and Unblock the Notifications











