Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டேனியல் பாலாஜியின் செயலை பார்த்து வியந்தேன்.. தான்யா தேசாய் !
சென்னை: "காட்மேன்" நடித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் தான்யா தேசாய்.
தான்யா தேசாய் இவர் ஒரு நடிகை மற்றும் பாடகரும் கூட பஞ்சாப் மொழி பாடல்களை ஒரு பிரபல தனியார் இசை நிறுவனத்துடன் இணைந்து அரங்கேற்றியவர்.
சமீபத்தில் ராகுல் ராயுடன் இணைந்து "நைட் அன்ட் ஃபாக்" என்ற ஒரு பாடலை ஷூட் செய்து பிரபலமானவர். தற்போது இவர் தமிழில் பாபு யோகேஷ்வரன் இயக்கும் புதிய வெப் சீரிஸில் டேனியல் பாலாஜியுடன் இணைந்து நடிக்கிறார்.

காட்மேன் வெப் சீரிஸ்
இதனை இளங்கோ ரகுபதி தயாரிக்கிறார். இந்த வெப் சீரிஸ்க்கு "காட் மேன்" என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் இவர்களுடன் சோனியா அகர்வால் மற்றும் ஜெயப்பிரகாஷும் நடிக்கின்றனர். இதில் அவர் நடித்துள்ள கதாபாத்திரம் மற்றும் இந்த வெப் சீரிஸ் பற்றி அவர் கூறியதாவது:

திரில்லர் கதை
இது ஒரு க்ரைம் திரில்லர் கலந்த ஒரு கதை. மதம், அரசியல் சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் இந்த முழு வெப் சீரிஸ். நான் இதில் மாயா என்ற கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி உடன் நடிக்கின்றேன். கடவுள் மீது அதிக நம்பிக்கை உள்ள பெண்ணாக நடிக்கிறேன். இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை இதற்கு முன் நான் நடித்ததில்லை, இந்த கதாபாத்திரம் கிடைத்ததற்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் சென்னை மற்றும் மூனார் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.

டேனியல் பாலாஜி
அவருடன் நடித்தவர்களை பற்றி கூறுகையில், ஜெயப்பிரகாஷ் சார் மற்றும் டேனியல் பாலாஜி, ஆகிய இருவரும் மிகச்சிறந்த கலைஞர்கள், இவர்கள் இருவருடனும் இணைந்து நடிக்கும்பொழுது நான் பலவற்றை கற்று கொண்டேன். டேனியல் பாலாஜி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஆகிவிட்டார், செட்டில் எப்போதும் கூலாக இருப்பார்.தமிழ் ஒரு அழகான மொழி எனக்கு தமிழில் பேச மிகவும் ஈஸியாக இருந்தது.

பெர்பெக்ட்
இவர்கள் இருவரும் ஷூட்டிங்கில் மிகவும் கரெக்டாக இருந்தனர். டேனியல் பாலாஜி ஷூட்டிங்கில் படு சுறுசுறுப்பாக இருந்தார். 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் கூறிய நேரத்திற்கு சரியாக வந்து விடுவார் அவரிடம் நிறைய கற்று கொண்டேன். மேலும் காலை ஏழு மணிக்கு ஷூட்டிங் துவங்கும் சரியாக மாலை ஏழு மணிக்கு ஷூட்டிங் நிறைவடையும் இது தான் சரியாக இருந்தது. இது போன்ற ஒரு படக்குழு உடன் வேலை செய்ததில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என கூறினார் தான்யா தேசாய்.