ரஜினியின் சிவாஜி பட பாடலை பாடி ஆட்டம் போட்ட வெள்ளைக்காரங்க.. ஏஆர் ரஹ்மான் ஷேர் செய்த டக்கர் வீடியோ!
சென்னை: ரஜினிகாந்தின் சிவாஜி பட பாடலை பாடி டென்மார்க் ரசிகர்கள் ஆட்டம் போட்ட வீடியோவை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் சிவாஜி தி பாஸ்.
நடிகர் ரஜினிகாந்த், ஷ்ரேயா, விவேக், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நா முத்துக்குமார் வரிகள்
இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்தின் அறிமுக பாடலாக பல்லேலக்கா பாடல் இடம்பெற்றிருந்தது. நா முத்துக்குமார் வரிகளில் உருவான இப்பாடலுக்கு நயன்தாராவும் நடனமாடியிருந்தார்.

டென்மார்க் ரசிகர்கள்
கிராமத்து வாழ்க்கை முறையை சொல்லும் பாடலாக இருந்த இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்பாடலை டென்மார்க் ரசிகர்கள் குழுவாக சேர்ந்து பாடியுள்ளதோடு ஆடியும் உள்ளனர்.

பாடியும் ஆடியும் அசத்தல்
டென்மார்க் தலைநகர் காப்பென்ஹென்னில் கூடிய ரசிகர்கள் ஏஆர் ரஹ்மான் இசையில் ரஜினி நடிப்பில் உருவான பல்லேலக்கா பாடலை பாடியும் ஆடியும் அசத்தியுள்ளனர். இந்த வீடியோவை ஏஆர் ரஹ்மான் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இரண்டு லெஜன்ட்ஸ்
பல்லேலக்கா அட் காப்பென்ஹென் என்று குறிப்பிட்டுள்ளார் ஏஆர் ரஹ்மான். ஏஆர் ரஹ்மானின் இந்த வீடியோவை பிரபலங்கள் பலரும் லைக் செய்துள்ளனர். இரண்டு தமிழ் லெஜன்டுகள் ஒட்டு மொத்த தமிழர்களையும் பெருமைப்பட செய்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ரம்யா கிருஷ்ணன்
மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் வாவ் கிரேட்.. லெஜண்ட்ஸ் என இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். டென்மார்க் ரசிகர்கள் சிவாஜி பட பாடலை பாடி டான்ஸ் ஆடியிருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ரசிர்கள் வாழ்த்து
தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளான நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இப்படி ஒரு வீடியோ வைரலாவதை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











