Denzel Washington - எல்லாம் விஜய் மகிமை.. இந்தியாவில் பிரபலமடைந்த ஹாலிவுட் ஹீரோ.. கூகுளில் நடந்த தரமான சம்பவம்
சென்னை: Vijay And Denzel Washington (விஜய், டென்சல் வாஷிங்டன்) தி ஈக்வலைஸர் 3 படத்தை விஜய் பார்த்த புகைப்படத்தை அடுத்து அந்தப் படத்தின் ஹீரோ டென்சல் வாஷிங்டன் கூகுளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஹாலிவுட் நடிகராகியிருக்கிறார்.
லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் 68ஆவது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சூடு பிடிக்க தொடங்கியிருக்கின்றன. அதன் காரணமாக அமெரிக்கா சென்றிருக்கும் விஜய் 3டியில் தனது உடலை முழு ஸ்கேன் செய்துகொண்டார். அதுதொடர்பான புகைப்படத்தை வெங்கட் பிரபு வெளியிட்டு எதிர்காலத்துக்கு வருக என்று தெரிவித்திருந்தார்.

சைன்ஸ் பிக்ஷன் கதையா?: வெங்கட் பிரபு அந்த கேப்ஷனோடு புகைப்படத்தை பகிர்ந்ததை தொடர்ந்து விஜய் 68 படத்தின் கதை குறித்து பல யூகங்கள் கிளம்பியிருக்கின்றன. அதன்படி இந்தப் படம் சைன்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகிறது என்றும்; டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு உருவாகிறது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் படத்தின் ட்ரெய்லரோ, டீசரோ வரும்வரை எதையும் உறுதியாக கூற முடியாது.
தி ஈக்வலைஸர் 3: 3டி ஸ்கேன் புகைப்படத்தோடு மட்டுமின்றி மற்றொரு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார் வெங்கட் பிரபு. அதன்படி டென்சல் வாஷிங்டன் நடித்த தி ஈக்வலைஸர் 3 படத்தை விஜய் அமெரிக்காவில் இருக்கும் தியேட்டரில் பார்த்தார். அப்போது டென்சல் வாஷிங்டன் ஸ்க்ரீனில் வருகையில் விஜய் தனது இரண்டு கைகளையும் அகல விரித்தபடி ஃபேன் பாய் மொமண்ட்டில் இருந்தார். அந்தப் புகைப்படத்தோடு, "முதல்முறையாக தளபதி விஜய்யின் ஃபேன்பாய் மொமண்ட்டை படம் பிடித்திருக்கிறேன்" என வெங்கட் பிரபு கேப்ஷனையும் போட்டிருந்தார்.

அதிக தேடல்: இதனையடுத்து டென்சல் வாஷிங்டன் என்றால் யார் என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதிக்க ஆரம்பித்தனர். உலக சினிமா பார்க்கும் ரசிகர்கள் அவர் குறித்து தொடர்ந்து பதிவிட ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் அதுதொடர்பான மீம்ஸ்களையும் ரசிகர்கள் பறக்கவிட்டனர். இந்நிலையில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஹாலிவுட் நடிகர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் டென்சல் வாஷிங்டன்.
ஒரு நாளுக்கு சராசரியாக நூற்றுக்கு 3 பேர் தேடிக்கொண்டிருந்ததிலிருந்து 100க்கு 100 பேரும் வாஷிங்டன் யார் என்பது குறித்து தேடியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் எங்கள் தளபதியால் ஒரு ஹாலிவுட் ஹீரோவே பிரபலமடைந்திருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
லியோ ஓவர்: இதற்கிடையே லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஆரம்பித்திருக்கின்றன. விரைவில் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் விஜய் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று கருதப்படுகிறது. லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











