twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சகோதரர் நடிகர் விவேக் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்!

    |

    சென்னை: நடிகர் விவேக் விரைவில் நலம்பெற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    நடிகர் Vivekன் தற்போதைய உடல்நிலை | What Happened to Vivek PRO Nikhil Murugan

    பிரபல நகைச்சுவை நடிகரான விவேக்கிற்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மயங்கிய அவரை குடும்பத்தினர் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஜெயலலிதா போல் நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை.. பின்னடைவில் இருந்து மீட்க மருத்துவர்கள் தீவிரம்!ஜெயலலிதா போல் நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை.. பின்னடைவில் இருந்து மீட்க மருத்துவர்கள் தீவிரம்!

    ஆஞ்சியோ சிகிச்சை

    ஆஞ்சியோ சிகிச்சை

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்ஸ் குறைந்தும் மயக்க நிலையிலும் இருந்த விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவரது பிஆர்ஓ நிகில் முருகன் கூறினார்.

    எக்மோ சிகிச்சை

    எக்மோ சிகிச்சை

    ஆனால் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் செய்யும் வகையில் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சமூக வலைதளங்கள்

    சமூக வலைதளங்கள்

    நடிகர் விவேக் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் விவேக் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    பிரார்த்திக்கிறேன்

    பிரார்த்திக்கிறேன்

    இதுதொடர்பான அவரது டிவிட்டில், மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Deputy Chief Minister O Paneerselvam tweets about actor Vivek. Vivek hospitalized due to Heart attack.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X