3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடருவேன்.. ரைஸாவுக்கு தோல் மருத்துவர் வார்னிங்!

சென்னை: நடிகை ரைஸா 3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என தோல் மருத்துவர் பைரவி எச்சரித்துள்ளார்.

Recommended Video

Wrong Facial விவகாரம்.. Raiza-வின் புகார்..Doctor Bhairavi Senthil விளக்கம்

நடிகை ரைஸா வில்சன் பிக்பாஸ் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது ரைஸாவுக்கு.

வேலை இல்லா பட்டதாரி 2, தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது த சேஸ், காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர், ஹாஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தவறான சிகிச்சை

தவறான சிகிச்சை

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீங்கிய முகத்துடன் ஒரு போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். மேலும் முகத்துக்கு எளிமையான முறையில் 'பேசியல்' செய்ய தோல் மருத்துவர் பைரவியிடம் சென்றதாகவும் அவர் அளித்த தவறான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டது என்றும் கூறியிருந்தார்.

ரைஸா நோட்டீஸ்

ரைஸா நோட்டீஸ்

இதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தோல் மருத்துவருக்கு நடிகை ரைஸா வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 15 நாட்களில் இழப்பீடு தராவிட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் நடிகை ரைசா வில்சன் நோட்டீஸ் மூலம் தெரிவித்திருந்தார்.

ரைஸா மன்னிப்பு கேட்கவேண்டும்

ரைஸா மன்னிப்பு கேட்கவேண்டும்

இந்நிலையில் ரைசா அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு மருத்துவர் பைரவி பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், "எனது சிகிச்சை குறித்து நடிகை ரைசா அவதூறு பரப்பி வருகிறார். அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பெயரை கெடுக்க முயற்சி

பெயரை கெடுக்க முயற்சி

அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் ரைசா தனது நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாகவும் மருத்துவர் பைரவி குற்றம்சாட்டி உள்ளார்.

ரைஸா கையெழுத்திட்டார்

ரைஸா கையெழுத்திட்டார்

ஏற்கனவே நடிகை ரைஸா ஒப்புக்கொண்டுதான் இந்த பேசியல் சிகிச்சையை மேற்கொண்டார் என்றும், அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் தன்னிடம் உள்ளது என்றும் கூறியிருந்தார் பைரவி. மேலும் பேசியல் சிகிச்சைக்கு பிறகு அவர் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகளை மேற்கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X