நாங்க ஸ்பா நடத்தல.. ரைஸா பெயரையே கெடுத்துவிட்டார்.. ரூ.5 கோடி நஷ்ட ஈடு வேண்டும்.. டாக்டர் பைரவி!

சென்னை: தங்கள் மருத்துவமனையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய நடிகை ரைஸா 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தோல் மருத்துவர் பைரவி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைஸா. தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக உள்ளார்.

மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார. இந்நிலையில் நடிகை ரைஸா கடந்த வாரம் வீங்கிய முகத்துடன் ஒரு போட்டோவை ஷேர் செய்தார்.

ஒரு கோடி கேட்ட ரைஸா

ஒரு கோடி கேட்ட ரைஸா

மேலும் தனக்கு தோல் மருத்துவர் பைரவி தவறான ஃபேசியல் சிகிச்சை அளித்ததால் தனது முகம் வீங்கி விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். 1.27 லட்சம் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகப்பொலிவு பெறாமல் ரத்த கசிவு மற்றும் வீக்கம் தான் ஏற்பட்டது என்று கூறிய ரைஸா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மருத்துவர் பைரவிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

ரூ.1 கோடி நஷ்ட ஈடு

ரூ.1 கோடி நஷ்ட ஈடு

உதவி மருத்துவர் அளித்த சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் பைரவி அளித்த சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டது என்றும் 15 நாளில் இழப்பீடு தராவிடில் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் வழக்கறிஞர் மூலம் தெரிவித்திருந்தார் ரைஸா.

 மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

இதனை தொடர்ந்து தோல் மருத்துவர் பைரவி ரைஸாவுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பினார். மேலும் தனது சிகிச்சை குறித்து நடிகை ரைசா அவதூறு பரப்பி வருகிறார் என்றும் அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார.

பெயரை கெடுக்க முயற்சி

பெயரை கெடுக்க முயற்சி

அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். மேலும் ரைசா தனது நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாகவும் மருத்துவர் பைரவி குற்றம்சாட்டினார். இந்நிலையில் ரைஸாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்க தோல் மருத்துவர் பைரவி செந்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

ஒப்புதலின் பேரிலேயே சிகிச்சை

ஒப்புதலின் பேரிலேயே சிகிச்சை

அப்போது பேசிய அவர், இதே சிகிச்சையை இதற்கு முன் தங்களிடம் மூன்று முறை எடுத்திருக்கிறார் என்று கூறினார். முகத்தில் அழகு சேர்க்கும் சிகிச்சையை ரைஸா எடுத்துக் கொண்டதாகவும் அவருடைய ஒப்புதலின் பேரில் தான் இந்த சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும் பைரவி தெரிவித்தார்.

ஸ்பா நடத்தவில்லை

ஸ்பா நடத்தவில்லை

தாங்கள் ஒன்றும் ஸ்பா நடத்தவில்லை என்றும் தான் ஒரு தோல் மருத்துவர் என்றும் அவருக்கு அளிக்கப்பட்டது சிகிச்சை என்றும் தெரிவித்தார். சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்தும் ரைஸாவுக்கு எடுத்துரைத்ததாகவும் பின்பற்றாவிட்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று கூறியதாகவும் மருத்துவர் பைரவி செந்தில் தெரிவித்தார்.

Recommended Video

Wrong Facial விவகாரம்.. Raiza-வின் புகார்..Doctor Bhairavi Senthil விளக்கம்
ரூ. 5 கோடி நஷ்ட ஈடு

ரூ. 5 கோடி நஷ்ட ஈடு

மேலும் தங்களுடைய மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன் நடிகை ரைஷா செயல்பட்டு இருப்பதால் நஷ்டஈடாக அவர் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தை அணுகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X