எக்ஸலென்ட் என வாழ்த்திய ரஜினி.. லீக்கான ஆடியோ.. கவலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்து பாராட்டிய ஆடியோ லீக்கானதால் அதன் இயக்குநரான தேசிங்கு பெரியசாமி கவலையில் அடைந்துள்ளார்.

Recommended Video

Sushant காதலி கண்கலங்கி நீதி கேட்டுள்ளார் • Rhea Chakraborty

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

வசூலை குவித்தது

வசூலை குவித்தது

இந்தப் படம் யூகிக்க முடியாத வகையில் பல அதிரடி திருப்பங்களுடன் மிகவும் சுவாரசியமாக காட்சியாக்கப்பட்டிருந்தது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலையும் குவித்தது இந்தப் படம்.

எக்ஸலென்ட்

எக்ஸலென்ட்

இந்நிலையில் தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அதன் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார். படத்தை எக்ஸ்லென்ட், சூப்பர் என புகழ்ந்த ரஜினி இத்தனை நாட்கள் கழித்து தாமதமாக படத்தை பார்த்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.

கடவுளுக்கு நன்றி..

கடவுளுக்கு நன்றி..

நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தியதை தனது டிவிட்டர் பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் நேற்று பகிந்தார் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. நடிகர் ரஜினிகாந்த் பேசிய வார்த்தைகளை குறிப்பிட்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்திருந்தார் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி.

கசிந்த ஆடியோ

கசிந்த ஆடியோ

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியுடன் பேசிய ஆடியோ இன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அந்த ஆடியோ உரையாடல் ஊடகங்களிலும் செய்தியாக ஒளிபரப்பப்படுகிறது.

அவ்ளோ சந்தோஷம்

அவ்ளோ சந்தோஷம்

இதனால் கவலை அடைந்துள்ளார் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், விஷ் பண்ண எல்லாருமே, என்கிட்டேயே தலைவர் பேசின மாதிரி அவ்ளோ சந்தோஷமுன்னு சொல்றாங்க.. எல்லோருக்கும் நன்றியும் அன்பும்.

துரதிர்ஷ்டவசமாக..

துரதிர்ஷ்டவசமாக..

ஆனால் மிகவும் பர்சனலான அந்த போன் கால் உரையாடல் லீக்கானதால் தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சியாக இல்லை. என்னுடைய டிவிட்டில் கூட நான் தலைவரின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடந்துவிட்டது. எல்லாம் நன்மைக்கே.. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.. என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X