தலைவர் 170.. இந்த தடவை மிஸ் ஆகாது.. பெரிய சான்ஸை தட்டித் தூக்க காத்திருக்கும் அந்த இயக்குநர்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தையே அந்த இயக்குநர் தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தட்டித் துக்கினார்.

இந்நிலையில், தலைவர் 170 படத்தை இயக்கும் வாய்ப்பு அதே இயக்குநருக்கு கிடைக்கும் என பேச்சுக்கள் கிளம்பி இருக்கின்றன.

இயக்குநர் சொன்ன சரித்திர கதை ரஜினிகாந்துக்கு பிடித்துப் போன நிலையிலும் அதை வேண்டாம் என சொல்ல அதுமட்டுமே காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் ஸ்டார்ட் ஆகப் போகுது

ஜெயிலர் ஸ்டார்ட் ஆகப் போகுது

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக போகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் அதற்காக செட் அமைக்கும் பணிகளும் ஆரம்பித்து விட்டன என்கின்றனர்.

தலைவர் 170

தலைவர் 170

இந்த ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் வெளியானதை போலவே அடுத்த ஆண்டு சம்மர் ரிலீஸாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிரது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள்ளே முடிந்து விடும் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், தலைவர் 170 படம் பற்றிய பேச்சுக்களும் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

இயக்குநர் யாரு

இயக்குநர் யாரு

துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் ரஜினிகாந்தின் உள்ளத்தை கொள்ளையடித்த இயக்குநர் தேசிங் பெரியசாமி தான் தலைவர் 169 படத்தையே இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் சொன்ன பீரியட் படத்தின் கதையும் ரஜினிக்கு பிடித்துப் போன நிலையில், அதிக பட்ஜெட் மற்றும் படப்பிடிப்புக்கு அதிக கால்ஷீட் ஒதுக்க வேண்டிய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அந்த படம் கைவிடப்பட்டது.

பேச்சுவார்த்தை தீவிரம்

பேச்சுவார்த்தை தீவிரம்

இந்நிலையில், தலைவர் 170 படத்தை இயக்கும் வாய்ப்பு தேசிங் பெரியசாமிக்கே கிடைக்கும் என பேச்சுவார்த்தைகள் அடிபடத் தொடங்கி உள்ளன. அதற்கான உறுதியான பேச்சுவார்த்தைக்ளும் ரஜினிகாந்த் மற்றும் தேசிங் பெரியசாமி தரப்பில் நடைபெற்று வருவதாகவும், ரஜினி படத்துக்காக புதிதாக எந்தவொரு நடிகருக்கும் அவர் கதை சொல்ல வில்லை என்றும் கூறுகின்றனர். எல்லாம் ஓகேவானால் அடுத்த படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X