தேசிங்கு ராஜா: 350 அரங்குகளில் வெளியாகும் விமலின் முதல் படம்!
சென்னை: எஸ் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள தேசிங்கு ராஜா படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் வழங்க ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் "தேசிங்கு ராஜா".

பிந்து மாதவி
விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்துள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்துக்குப் பிறகு இருவரும் தொடர்ந்து ஜோடி சேரும் இரண்டாவது படம் இது.
சூரி, சிங்கம்புலி, சாம்ஸ், சிங்கமுத்து, வினுசக்ரவர்த்தி, ரவி மரியா, வனிதா, வே.ஆ.மூர்த்தி, வி.ஞானவேல், சாமிநாதன் ஆடுகளம் நரேன்,ஆகியோர் நடிக்கிறார்கள்.

டி இமான்
சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, டி இமான் இசைமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். படத்தின் ட்ரைலரும் பாடல்களும் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மனம் கொத்திப் பறவைக்குப் பிறகு கதை, திரைக்கதை எழுதி எஸ். எழில் இயக்கியுள்ள படம் இது.

350 அரங்குகளில்
"தேசிங்கு ராஜா"படம் இம்மாதம் (ஆகஸ்ட் ) 23 ஆம் தேதி 350 திரையரங்குகளில் வெளியாகிறது. விமல் கதாநாயகனாக நடித்து அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் தேசிங்கு ராஜாதான் என்று எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மதனும் இயக்குனர் எழிலும் தெரிவித்துள்ளனர்.

பரோட்டா சூரி
இந்த படத்திலும் விமலுடன் காமெடிக் கூட்டணி அமைத்திருக்கிறார் பரோட்ட சூரி. ஏற்கெனவே களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்காவில் இருவரின் காமெடியும் நல்ல வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











