லேடி போலீஸ் கெட்டப்பில் புகழ்.. தேசிங்குராஜா 2 ஆரம்ப காட்சியே இப்படியா?.. இந்த படமாவது கை கொடுக்குமா?

சென்னை: விலங்கு வெப்சீரிஸ் கடைசியாக நடிகர் விமலுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அவருக்கு பழையபடியே பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், வெற்றிப் படமான தேசிங்கு ராஜா படத்தின் 2ம் பாகத்தை கையிலெடுத்துள்ளார் விமல். நாளை ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள அந்த படத்தின் ஸ்நீக் பீக் காட்சி வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காமெடியில் கலக்கிய நடிகர் புகழ் தேசிங்குராஜா 2 படத்தில் லேடி போலீஸ் கெட்டப்பில் பக்காவாக நடித்துள்ளார். அவருடைய அறிமுகம் மற்றும் பூமழை தூவ விமல் போலீஸ் உடையில் கொடுக்கும் என்ட்ரி என ஆரம்பமே அலப்பறையாக உள்ளது.

Desinguraja sneak peak reveals Pugazh s lady police getup and Vemal s intro
Photo Credit:

விமல் நடிப்பில் முன்னதாக வெளியான போகுமிடம் வெகு தூரமில்லை படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டுக்களை அள்ளியது.

தேசிங்குராஜா 2: விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும், அஜித்தின் ராஜா, ரவி மோகனின் தீபாவளி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எழில் விமலை வைத்து தேசிங்குராஜா படத்தை இயக்கியும் வெற்றிக் கண்டார். அதன் பின்னர், பெரிதாக படங்களை இயக்காமல் இருந்து வந்த அவர், தேசிங்குராஜா 2 படத்தை மீண்டும் விமலுடன் இணைந்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக, பூஜிதா பொன்னடா என்பவர் நடித்துள்ளார். தேசிங்கு ராஜா திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியான நிலையில், சுமார் 12 வருடங்கள் கழித்து அதன் 2ம் பாகம் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் உருவாகி உள்ளது. ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

லேடி போலீஸாக புகழ்: விஜய் டிவி பிரபலமான புகழ் அஜித்தின் வலிமை, சந்தானத்தின் சபாபதி உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தார். மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமான புகழ் தேசிங்குராஜா 2 படத்தில் லேடி போலீசாக நடித்து காமெடியில் கலக்கியுள்ளார். காக்கிச் சட்டையில் அவர் காரில் இருந்து இறங்கியதும், அவரது பெயர் வர்ணஜாலம் என்பதை காட்டும் ஸ்நீக் பீக் டிரெண்டாகி வருகிறது.

அடல்ட் வசனங்கள்: புகழ் லேடி போலீசாக வந்தவுடன் கான்ஸ்டபிளான வையாபுரி மற்றும் சாம்ஸ் விமல் குறித்தும் அவர் செய்யும் சேட்டைகள் குறித்தும் போட்டுக் கொடுத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ஸ்கூட்டியில் ஒரு பெண் வேகமாக வர, அவரை பார்த்து மூட வேண்டியதை மூடாமல் துப்பாட்டாவை இப்படி போட்டுக் கொண்டு வருகிறாயே கழட்டு என்று சொல்ல, நீங்க சொல்லித்தான் கழட்டுறேன் என அவரும் அடல்ட் வசனங்களாக பேச, அப்படியே ஹீரோ இன்ட்ரோ காட்சியை மாற்றுகிறது.

பூமழை தூவ: போலீஸ் உடையில் நடிகர் விமல் இரு சக்கர வாகனத்தில் வர பலரும் அவருக்கு பூக்களை தூவுகின்றனர். இதெல்லாம் அவனே காசு கொடுத்து செட்டப் செய்த ஆள் என புகழ் வையாபுரி மற்றும் சாஸிடம் சொல்லும் காட்சி வெளியாகி இருக்கிறது. கடைசியாக 2022ம் ஆண்டு எழில் இயக்கிய யுத்த சத்தம் படம் ஃப்ளாப் ஆன நிலையில், இந்த படம் அவருக்கும் விமலுக்கும் கை கொடுக்குமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X