கொரோனாவாவது வைரஸாவது... ஜார்ஜியா ஷூட்டிங்கிறகுப் பறந்த ஹீரோயின்... கண்டபடி எச்சரிக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: கொரோனா வைரஸ் பீதியையும் மீறி பிரபல ஹீரோயின், ஜார்ஜியாவில் நடக்கும் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார்.

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர், தெலுங்கு ஹீரோ பிரபாஸ். இந்தப் படத்தை தொடர்ந்து மெகா பட்ஜெட் படமான 'சாஹோ'வில் நடித்தார்.

இதில் ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

டைட்டில்

டைட்டில்

தமிழ், தெலுங்கு, இந்தியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து, அந்தப் படத்தை தயாரித்த யுவி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார். படத்தை கே கே ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

ஜார்ஜியா

ஜார்ஜியா

பீரியட் படமான இதன் ஷூட்டிங் இப்போது ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. படத்துக்காக அங்கு மார்க்கெட் செட் போடப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பல நாடுகளில் சுற்றுலா விசாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல படங்களின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படங்களின் ரிலீஸும் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

ஆனால், கொரோனாவை கண்டுகொள்ளாமல் பிரபாஸ் படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகை பூஜா ஹெக்டே, அங்கு சென்றுள்ளார். வழியில் இன்ஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் கமென்ட் போட்டுள்ளனர்.

முகத்தைத் தொடாதீங்க

முகத்தைத் தொடாதீங்க

ஒரு ரசிகர், ஊரெல்லாம் கரோனா பீதியில இருக்கோம். நீங்க இப்படி ஹாயா இருக்கீங்களே?' என்று கேட்டுள்ளார். 'ஏர்போர்ட்லதாங்க மொத்த கொரோனா வைரஸூம் இருக்கு. நீங்க அங்க போய் உட்கார்ந்து இருக்கீங்களே?' என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். 'வரும் போது உங்களை இந்தியாவுக்குள்ள அனுமதிப்பாங்களா? என்று ஒருவர் விசாரித்துள்ளார். சிலர், 'மாஸ்க் போட்டிருந்தாலும் கையால முகத்தைத் தொடாதீங்க' என்று ஆரம்பித்து நீண்ட அட்வைஸ் செய்துள்ளனர்.

நாக் அஸ்வின்

நாக் அஸ்வின்

இந்தப் படத்தின் ஷூட்டிங் அங்கு 15 நாட்கள் நடக்க இருக்கிறது. மற்ற நாடுகளை போல ஜார்ஜியாவில் கொரோனா தாக்குதல் இல்லை என்பதால் படக்குழு அங்கு சென்றுள்ளது என்று தெரிகிறது. இந்தப் படத்தை அடுத்து, 'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் படம். மூன்றாம் உலகப் போர் என்ற விஷயத்தை மையமாக வைத்து உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X