விவகாரமான கதை எடுக்கும் விக்னேஷ் சிவன்?.. லவ் இன்சூரன்ஸ் கம்பெனியில் சீமானுக்கு அந்த ரோலா?

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்போது பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற படத்தை இயக்கிவருகிறார். இதில் பிரதீப்புக்கு ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்க; இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் மீது ஓரளவு எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் சூழலில் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவ ஆரம்பித்திருக்கிறது.

போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதில் சிம்பு ஹீரோவாகவும், வரலட்சுமி ஹீரோயினாகவும் நடித்திருந்தார்கள். துப்பாக்கி படத்துக்கு போட்டியாக களமிறங்கிய அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. இருப்பினும் விக்னேஷ் சிவனின் மேக்கிங்கை பார்த்த பலரும்; இயக்குநருக்கு இது முதல் படம் போன்றே இல்லை என்று பாராட்டு தெரிவித்தார்கள். அதுமட்டுமின்றி கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வருவார் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள்.

வாய்ப்புகள் இல்லை: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை போடா போடி படத்துக்கு பிறகு விக்கிக்கு சில வருடங்கள் சினிமா இயக்குவதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே தனக்கு கிடைத்த வேலைகளை எல்லாம் சினிமாவில் செய்தார். பாடல்கள் எழுதுவது, படத்துக்கு போஸ்டர் செய்வது என தன்னை சினிமாவிலேயே வைத்துக்கொண்டார். அப்படி போஸ்டர் டிசைன் மூலம் நடிகர் தனுஷுக்கு அறிமுகமானார். அந்த அறிமுகத்தின் அடிப்படையில் நானும் ரௌடிதான் படத்தை தனுஷ் தயாரிக்க முன்வந்தார்.

Details about Seeman s role in the film Love Insurance Kompany directed by Vignesh Shivan

மெகா ப்ளாக் பஸ்டர்: அந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா, பார்த்திபன், ஆனந்த்ராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படமும் டார்க் காமெடி ஜானரில் உருவாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்துக்கு பிறகு அவர் சூர்யாவை வைத்து இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரை வைத்து உருவாக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் படுதோல்வியையே சந்தித்தன. அந்தப் படங்களை பார்த்த ரசிகர்கள் நானும் ரௌடிதான் இயக்கிய விக்கியா இந்தப் படங்களை இயக்கினார் என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள்.

நயனுடன் திருமணம்: இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் பணியாற்றியபோது நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் சில வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்கிற பெயரில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு விக்கிக்கு வந்தது.

Details about Seeman s role in the film Love Insurance Kompany directed by Vignesh Shivan

விலகிய விக்கி: லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்த அந்தப் படத்தின் கதையை அஜித்திடம் சொல்லி ஓகேயெல்லாம் வாங்கிவிட்டார். ஆனால் கதையின் முதல் பாதியை மட்டும்தான் அவர் சொன்னதாகவும்; இரண்டாவது பாதிக்கு இழுத்தடித்ததாகவும் கூறப்பட்டது. எனவே அந்தப் படம் கைவிடப்பட்டது. இதனையடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற படத்தை தொடங்கினார். இதில் கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்லிட்டோரும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கதை?: இந்நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) படத்தின் கதை குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அதாவது மகனும், தந்தையும் எதிர்காலத்தில் ஒரே பெண்ணை காதலிப்பது போன்று கதையை விக்கி அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு சீமான் தந்தையாக நடித்திருக்கிறார் என்று ஒரு தகவல் ஓடியதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X