இந்த நடிகர்கள், நடிகைகளை தெரியும்.. அவங்க அப்பாக்கள் என்ன செஞ்சாங்க தெரியுமா?.. வலுவான பேக்ரவுண்ட்தான்
சென்னை: தமிழ் சினிமாவுக்கென்று இந்திய திரையுலகில் பெரிய மதிப்பு இருக்கிறது. ஏனெனில் இங்கு பணியாற்றுபவர்கள் ஏகப்பட்ட திறமைகளை தங்கள் வசம் வைத்திருப்பவர்கள். பலர் பெரிய குடும்ப பின்னணி இல்லாமல் சினிமாவுக்குள் வந்து தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்கள். அதேசமயம் குடும்ப பின்னணி பொருளாதார ரீதியாக வலுவாக இருந்து சினிமாவுக்கு வந்து வென்ற சில நடிகர்கள், நடிகைகளை பார்க்கலாம்.
கோலிவுட்டில் எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள். இருந்தார்கள். அவர்கள் அனைவருமே திறமையாளர்கள்தான். திறமை இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பது பலரது கருத்து. அதேபோல் சினிமா பின்னணியோ, குடும்பத்தின் பொருளாதார பின்னணியோ வலுவாக இல்லாமல்; கஷ்டப்பட்டு உள்ளே வந்து வென்றவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். அதுமாதிரி வலுவான குடும்ப பின்னணி இருப்பவர்களும் கோலிவுட் வந்து வென்றிருக்கிறார்கள். அவர்கள் குறித்த லிஸ்ட்டை இதில் பார்க்கலாம்.
சித்தார்த்: மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக சேர்ந்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் சித்தார்த். ஆனால் அவரை இயக்குநர் ஷங்கர் தனது பாய்ஸ் படத்தில் ஹீரோவாக கமிட் செய்து பாதையை மாற்றிவிட்டார். அப்படத்துக்கு பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் அவர்; பாடல்கள் பாடுவதிலும் ஜொலிப்பவர். இவரது தந்தை ஒரு வங்கியில் நல்ல பொசிஷனில் வேலை பார்த்தவர். இவர்களுக்கு சென்னை போட் க்ளப்பிலும் வீடு இருக்கிறது.

போலீஸ் மகன் விஷ்ணு விஷால்: சித்தார்த்தை போன்று விஷ்ணு விஷாலும் நல்ல பின்னணியுள்ள குடும்பத்திலிருந்துதான் வந்தவர். அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்த படம் என்றால் வெண்ணிலா கபடி குழு. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர்; சமீபமாகத்தான் ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் தந்தை காவல் துறை டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்த் ரவி: தரமணி படத்தில் ஹீரோவாக அறிமுகமான வசந்த் ரவி வசந்த பவன் ஹோட்டல் ஓனரின் மகன் ஆவார். அதுமட்டுமின்றி எம்பிபிஎஸ் படிப்பையும் முடித்த அவர்; சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் திரைத்துறைக்கு வந்து நடித்துக்கொண்டிருக்கிறார். ஜெயிலர் படத்தில் இவரது கேரக்டர் நல்லபடியாகவே அமைந்திருந்தது. இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
அசினும், அதிதியும்: நடிகர்கள்போலவே நடிகைகளில் அசினின் குடும்பமும் நல்ல பேக்ரவுண்ட் உள்ள குடும்பம்தான். அவரது தந்தை ஒரு சிபிஐ ஆஃபிஸர். தாய் ஒரு சர்ஜன். அதேபோல் நடிகையும் சித்தார்த்தின் மனைவியுமான அதிதியின் தாய் தந்தையும் செட்டில் ஆனவர்கள்தான். அதிதியின் தந்தை ஃபேமஸான ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். தாய் ஒரு பாடகி ஆவார். இப்படி வலுவான பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து இவர்கள் வந்திருந்தாலும் சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்துதான் உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











