அனுமதிக்குப் பின் இன்றும் நாளையும் டெஸ்ட் ஷூட்.. கொரோனா பரவுவதால் பிரபல இயக்குனர் புது முயற்சி!

By

ஐதராபாத்: பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி சரியாக ஷூட்டிங் நடத்த முடியுமா என்பதைக் கவனிப்பதற்காக, ராஜமவுலி நடித்தும் 2 நாள் டெஸ்ட் ஷூட் இன்று தொடங்கி இருக்கிறது.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. அதாவது, இரத்தம் ரணம் ரெளத்திரம்.

பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அக்‌ஷய்குமார்

அக்‌ஷய்குமார்

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது என்று கூறப்படுகிறது. இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

தெலுங்கு ஷூட்டிங்

தெலுங்கு ஷூட்டிங்

பாலிவுட் ஹீரோயின் ஆலியா பட், முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சில மாநிலங்களில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா அரசும் ஷூட்டிங்கிற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் தெலுங்கு படங்களின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விரைவில் தொடங்க இருக்கிறது.

கையாள முடியுமா?

கையாள முடியுமா?

ராஜமவுலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஷூட்டிங்கும் ஐதராபாத் அருகே இதற்காக போடப்பட்டுள்ள செட்டில் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பாக, ஷூட்டிங் ஸ்பாட்டில், பாதுகாப்பு ஏற்பாடுகளின் நிலைமை, எத்தனை பேர் வரை படப்பிடிப்பில் பங்கேற்க முடியும், சமூக விலகலை சரியாக கையாள முடியுமா?

பின்பற்ற முடியுமா?

பின்பற்ற முடியுமா?

அரசு வகுத்துள்ள விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற முடியுமா என்பது உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக டெஸ்ட் ஷூட் நடத்த திட்டமிட்டார் ராஜமவுலி. அந்த டெஸ்ட் ஷூட், இன்றும் நாளையும் நடக்கிறது. ராஜமவுலியிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றுபவர்கள், இந்த டெஸ்ட் ஷூட்டை நடத்துகின்றனர்.

பாதுகாப்பு உபகரணங்கள்

பாதுகாப்பு உபகரணங்கள்

இதில் சுமார் 50 பேர் பங்கேற்றுள்ளனர். ஹீரோக்களுக்கு டூப்பை பயன்படுத்துகின்றனர். பிபிஇ கிட்ஸ் உட்பட சரியான பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, இந்த ஷூட்டிங்கை நடத்துகின்றனர். அரசு விதித்துள்ள விதிமுறைபடி, சரியாக நடத்த முடியுமா என்பதைப் பார்த்துவிட்டு, முடியும் என்றால் தொடர்ந்து ஷூட்டிங்கை நடத்த இருக்கிறார் ராஜமவுலி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X