லிங்காவில் ரஜினியோடு மோதும் புது வில்லன் தேவ் கில்!
லிங்கா படத்தில் ரஜினியுடன் மோதுகிறார் மகதீரா படத்தில் நடித்த தேவ் கில்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'லிங்கா'. இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். லாரன் இர்வின், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர்.

சந்தானம்
சந்தானம் காமெடியனாக நடிக்கிறார். வடிவேலுவும் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

ஜெகபதி பாபு
இப்படத்தில் ஜெகபதிபாபு வில்லனாக நடிப்பதாக கூறி வந்தனர். அவரும் தனது பேஸ்புக் பக்கத்தில் இத்தகவலைப் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தேவ் கில்லும் வில்லனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் மகதீரா, சுறா போன்ற படங்களில் நடித்தவர்.

தேவ் கில்
இது குறித்து தேவ் கில் கூறுகையில், "லிங்கா' படத்தில் நான் நடித்து வருவது உண்மைதான். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட கதையில் ரஜினியை எதிர்க்கும் ஜமீன்தார் கெட்டப்பிலான வில்லன் வேடத்துக்கு பொருத்தமான ஆள் தேடியிருக்கிறார்கள்.

த்ரில்லாக உள்ளது
மகதீரா உள்ளிட்ட சில படங்களில் என்னைப் பார்த்து விட்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தார். ரஜினி சாருடன் மோதுவதை நினைத்தால் த்ரில்லாக உள்ளது'' என்றார்.


Click it and Unblock the Notifications











