“தேவ்..ஒரு காதல் படம்தான்.. ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல".. குழப்புறீங்களே கார்த்தி!

தேவ் படம் காதலைப் பற்றி பேசும் படமல்ல என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

தேவ் லவ் படம்தான் ஆனால் லவ் படம் இல்லை குழப்பும் கார்த்தி- வீடியோ

சென்னை: தேவ் படம் காதல் படம்தான், ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல எனத் தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.

பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிப்பில் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத், ஆர்ஜே விக்னேஷ்காந்த், அம்ருதா நடித்துள்ள படம் தேவ்'. காதலர் தினத்தையொட்டி இப்படம் வரும் 14ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், கார்த்தி, ரகுல் ப்ரீத் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

மகிழ்ச்சி:

மகிழ்ச்சி:

அப்போது பேசிய கார்த்தி, "தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா? என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன். அவரின் தாத்தா வெற்றி படமான "மதுர வீரன்" தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.

காதல் படம்:

காதல் படம்:

இப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும்.

கடுமையான உழைப்பு:

கடுமையான உழைப்பு:

ரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்.

ஸ்டைலிஷான படம்:

ஸ்டைலிஷான படம்:

ரொம்ப நாளுக்குப் பிறகு இப்படியொரு ஸ்டைலிஷான படத்தில் நடித்துள்ளேன். அதனால எங்குமே பருத்திவீரன், கொம்பன் படச் சாயல் தெரிந்து விடாத மாதிரி கொஞ்சம் அர்பன் லுக்கில் நடித்திருக்கிறேன்.

ஹாரிஸ் இசை:

ஹாரிஸ் இசை:

இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் எனக் கேள்விப் பட்டதுமே பக்கென இருந்தது. அவர் அண்ணனுக்கு நிறைய நல்ல பாட்டுகள் தந்திருக்கிறார். அதுதான் எனக்கு பயமே. அண்ணன் அளவுக்கு என்னால டான்ஸ் ஆட முடியுமா முடியாதே என யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் ஏதோ நன்றாக பண்ணியிருக்கிறேன் என நினைக்கிறேன்" என கார்த்தி தெரிவித்தார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X