புகார் எதிரொலி: தேவ் படத்தின் 15 நிமிட காட்சிகள் நீக்கம்
சென்னை: தேவ் படத்திற்கு எழுந்த விமர்சனத்தை அடுத்து அதன் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.
புதுமுகம் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்த தேவ் படம் காதலர் தினத்தன்று ரிலீஸானது. படத்தை பார்த்தவர்கள் ரொம்ப நீளமாக இருக்கிறது. படம் பொறுமையை சோதிக்கிறது என்றார்கள்.

மேலும் சில இடங்களில் பாடல்களும், ஆக்ஷன் காட்சிகளும் திணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக படத்தின் நீளம் பற்றியே அனைவரும் தெரிவித்தார்கள்.
இதையடுத்து 15 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. படத்தில் கார்த்தி ஸ்டைலாக உள்ளார், நன்றாக நடித்துள்ளார். அதை யாரும் குறை கூறவில்லை. ஆனால் அவரை தவிர படத்தில் யாரும் இம்பிரஸ் செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
தேவ் படப்பிடிப்பின்போது படக்குழு குலு, மணாலியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்தது. அப்படி எல்லாம் கஷ்ட்பபட்டு எடுத்த படத்திற்கு இப்படி விமர்சனம் வந்தால் கஷ்டமாகத் தான் இருக்கும்.
கார்த்தி கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது என்கிறார்கள் அவர் மீது அக்கறை கொண்டவர்கள்.


Click it and Unblock the Notifications











