கார்த்தியின் 'தேவ்' படம் பாருங்க, 2 பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக் வெல்லுங்க
சென்னை: தேவ் படம் பார்ப்பவர்களுக்கு 2 பிஎம்டபுள்யூ சூப்பர் பைக் பரிசாக கிடைக்கும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுமுகம் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த தேவ் படம் காதலர் தினத்தன்று ரிலீஸானது. படத்தில் கார்த்தி பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக் ஓட்டியிருந்தார்.

இந்நிலையில் அதே பிராண்ட் பைக்கை வெல்லும் வாய்ப்பு மக்களுக்கும் கிடைத்துள்ளது. இது குறித்து தேவ் படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
உங்கள் குடும்பத்தில் தேவ் போன்று வாழ்க்கையை நேசித்து வாழ்பவர் யாராவது இருக்கிறார்களா?. ஆம் என்றால் அவர்களை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேவ் படக்குழு சார்பில் அவர்களுக்காக 2 பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக்குகள் பரிசாக காத்திருக்கின்றன.

நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள ஸ்பெஷல் நபரோ அல்லது நண்பர்களோ இந்த பி.எம்.டபுள்யூ. பைக்கை ஏன் வெல்ல வேண்டும் என்று எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
மேலும் பின்வரும் 3 கேள்விகளுக்கான பதிலையும் அனுப்ப வேண்டும்.
1. வாழ்க்கையை பற்றிய தேவின் சித்தாந்தமும், அவருடைய தொழிலும் என்ன?
2. மேக்னா பணத்தின் மீது அதிக பற்று உள்ள தொழில் அதிபரா?
3. மேக்னா ஏன் தேவ்வை பிரிந்தார்?
ஒவ்வொரு கேள்விகளுக்குமான பதிலை 100 வார்த்தைகளுக்கு மிகாமலும் அல்லது உங்கள் பதிலை எங்களுக்கு வீடியோ மூலமாகவும் அனுப்பலாம். போட்டிக்கான கடைசி தேதி பிப்ரவரி 25ம் தேதி ஆகும்.
சரியான பதில் அனுப்புபவர்களில் இருந்து 2 பேரை தேவ் படக்குழு குலுக்கல் முறையில் தேர்வு செய்யும். பரிசு வழங்கும் நாள் குறித்த விபரங்கள் பிப்ரவரி 28ம் தேதி அறிவிக்கப்படும். தேர்வு செய்யப்படும் 2 பேருக்கு பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக்கை கார்த்தி வழங்குவார்.
பதில்களை [email protected] என்ற இமெயில் முகவரிக்கோ அல்லது +91 9600809382(வாட்ஸ்ஆப்) என்ற எண்ணிற்கோ அனுப்பலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











