நானும் ஸ்வர்ணலதாவும் ஓடி ஒளிந்துக் கொண்டோம்.. அப்படியொரு சம்பவம்.. மனம் திறந்து பேசிய தேவா!
சென்னை: ரஜினிகாந்தின் பாட்ஷா படம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா சமீபத்தில் அளித்த பேட்டியில் கம்போசிங்கின் போது நடைபெற்ற பல சுவாரஸ்ய தகவல்களை வெளிப்படையாக பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
72 வயதாகும் இசை ஜாம்பவானான தேவா சமீபத்திய பேட்டியில் அப்படியே சின்ன குழந்தை போல வெள்ளந்தியாக பேசிய பேச்சு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.

75 சதவீதம் ஜாலியாக இருப்போம், 25 சதவீதம் தாம் கம்போஸிங் இருக்கும் என்றும் ஏற்காடு, ஊட்டிக்கெல்லாம் இயக்குநர்கள் ஷூட்டிங் போனா அங்கேயே என்னை வரவழைத்து கம்போஸ் பண்ணச் சொல்லி ரகளை செய்வார்கள் என்று பேசியுள்ளார்.
ஆட்டோக்காரன் பாட்டை பாட சொன்ன ரஜினி: பாட்ஷா படத்திற்கு இசையமைக்கும் போது நான் ஆட்டோக்காரன் பாடலை என்னையே பாடச் சொல்லிவிட்டார் ரஜினிகாந்த். ஆனால், நமக்கு தெரியும்ல, அவ்ளோ பெரிய தியேட்டர்ல, படம் ஓப்பன் பண்ணும் போது ரஜினி சாருக்கு எஸ்பிபி சார் வாய்ஸ் இருந்தா தான் மாஸாக இருக்கும்னு, எஸ்பிபி பாடியதும் தான் அந்த பாட்டுக்கே ஒரு உயிர் வந்தது என ஓபன் ஹார்டட்டாக பேசினார் தேவா.

ஸ்வர்ணலதாவும் நானும் ஒளிந்துக் கொண்டோம்: இசையமைப்பாளராக அறிமுகமான புதிதில் யூனியன் ஸ்டிரைக் தெரியாமல் மியுசீக் கம்போசிஷனுக்கு பிளான் பண்ணிட்டோம். எனக்கு யாருமே சொல்லல, ஹம்மிங் என்றாலே ஸ்வர்ணலதா தான் என சினிமாவில் பலரும் அவங்களை அழைத்து பாட வைப்பது போல நானும் அவங்களை கூப்பிட்டுட்டேன்.
தடி தடியா ஆட்கள் யாருடா அது தேவா, யாரை கேட்டு மியூசிக் கம்போஸ் பண்ணிட்டு இருக்க என வந்துட்டாங்க, அவங்களுக்கு நான் யாருன்னே தெரியல, உடனே ஓடிப் போய் ரெக்கார்டிங் தியேட்டர் ரூம் மேல ஒளிந்துக் கொள்ள ஓடினேன். அங்கே பார்த்தால், எனக்கு முன்னாடி ஸ்வர்ணலதா அவங்க வந்து ஒளிஞ்சிட்டு இருந்தாங்க, அப்புறம் அவர்கள் சென்றதும் தம்பி சபேசனை அளித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன் என்று கூறினார்.

மீசைக்கார நண்பா பாட்டு வேண்டாம்னு சொல்லிட்டாரு: கே.எஸ். ரவிக்குமார் என் முகத்தை பார்த்தே பாட்டு கேட்க மாட்டார். முகத்தை பாருங்க சார்னு சொல்வேன். நீங்க அப்படியே ரியாக்ஷன் கொடுத்து நடிச்சி நல்ல பாட்டுன்னு நம்ப வச்சிடுவீங்கன்னு சொல்லுவார்.
மீசைக்கார நண்பா பாடலை பாடி காட்டியதும் அந்த எக்ஸ்பிரஷனை பார்த்து உடனே ஓகே சொல்லிட்டார். அடுத்த நாள் வந்து அந்த ட்யூன் வேண்டாம், மாத்திடுங்கன்னு சொன்னார். உங்க ரியாக்ஷனை பார்த்தே நான் ஓகே சொல்லிட்டேன் என்றார். அடுத்த ட்யூனுக்கு செல்வதற்கு முன்பாக ஏ.எம். ரத்னம் வந்து அந்த பாட்டு நல்லா இருக்கு, நிச்சயம் ஹிட் அடிக்கும் என்று சொன்னதால் தான் அந்த பாடல் தப்பித்தது என பல சுவாரஸ்யமான தகவல்களை தேவா பேசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











