நல்ல பாட்டுன்னாலே அது நான் இசையமைச்சதில்லேன்னு நினைக்கிறாங்க! - தேவா

By Shankar

சென்னை: தேவான்னாலே கானா, குத்துப்பாட்டுதான்னு முடிவு பண்ணிட்டாங்க. நல்ல பாட்டுன்னாலே அதை தேவா போட்டிருக்கமாட்டார்னு நினைக்கிறாங்க, என்றார் இசையமைப்பாளர் தேவா.

தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. கானா பாட்டு என்ற ஒன்றை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியதே தேவாதான்.

Deva returns with Dummy Tappasu

மிகவும் பரபரப்பாக இயங்கிவந்த தேவா, திடீரென்று எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போய்விட்டார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளராகக் களமிறங்கியுள்ளார். அவர் இப்போது இசையமைக்கும் படம் டம்மி டப்பாசு.

இப்படத்தில் நாயகனாக மலையாள நகைச்சுவை நடிகர் பிரவீன் பிரேம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் அறிமுகமாகிறார். இவர் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். நன்கு தமிழ் பேசக்கூடிய ரம்யா பாண்டியன், இப்படத்திற்காக சென்னை தமிழை பயிற்சிப் பெற்று, சொந்தக் குரலில் பேசியுள்ளார். கண்ணன் ஒளிப்பதிவு செய்ய ரவி இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்துக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் உள்ள தேவாவின் ஸ்டுடியோவில் நடந்தது.

அப்போது, 'நீங்கள் கானாவை பிரபலப்படுத்திய நேரத்தில் அதை மட்டமாக பலர் விமர்சித்தார்கள். ஆனால் இன்றைக்கு கானா பாட்டு இல்லாத படங்களே இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த தேவா, "கானா பாடல்களைப் பற்றி அன்றைக்கு நிறைய பேருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். இதென்னய்யா பாட்டு, மட்டமான தமிழ்ல இருக்கேன்னு சொல்லியிருக்காங்க. இப்போ அதே கானா பாட்டு படங்கள்ல முக்கிய அம்சமா இருப்பதை நினைத்து சந்தோஷப்படறேன்.

கானா பாட்டு எங்கே கேட்டாலும் அது தேவா பாட்டுன்னு சொல்லிடறாங்க. ஆனா நான் போட்ட நல்ல பாடல்களை என்னுடையதுதான்னு பலரும் ஒப்புக்க மாட்டேங்கறாங்க.

ஒருநாள் டிவி பாத்துக்கிட்டிருந்தேன். அதுல புல்வெளி புல்வெளின்னு ஒரு பாட்டு ஓடிக்கிட்டிருக்கு, ஆனா வேற இசையமைப்பாளர் பேர்ல.

நான் மெலடிப் பாடல்கள்தான் அதிகம் போட்டிருக்கேன். ஆனால் அந்த மெலடிகளைக் கேட்பவர்கள், இது நிச்சயம் தேவா போட்டதா இருக்காது. வேற இசையமைப்பாளரோடதா இருக்கும்னு சொல்லிடறாங்க... அதுல எனக்கு வருத்தம்தான்," என்றார்.

மத்திய சென்னையில் குடிசை பகுதியில் வாழக்கூடிய பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையே ஏற்படும் காதலை சென்னையின் இயல்போடு நகைச்சுவையாக சொல்லும் படம் இந்த டம்மி டப்பாசு.

இந்தப் படத்திலும் ஒரு அட்டகாசமான கானா பாடலைப் பாடியுள்ளாராம் தேவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X