தேவாவின் அடுத்த ரவுண்டு!

By Shankar

கானா ஸ்பெஷலிஸ்டாகக் களமிறங்கி, பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்த தேவா, ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிஸியாக இசைமைக்க ஆரம்பித்துள்ளார்.

மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. ஆனால் அவரை பிரபலமாக்கியது ராமராஜனின் மனசுக்கேத்த மகராசாவும், தொடர்ந்து வந்த வைகாசி பொறந்தாச்சு படங்களும்தான்.

27 படங்கள்

27 படங்கள்

1997-ல் அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 27 படங்களுக்கு இசையமைத்தார். அந்த அளவு பிஸியான இசையமைப்பாளர்.

கானா ஸ்பெஷலிஸ்ட்

கானா ஸ்பெஷலிஸ்ட்

சென்னை தமிழில் பாடப்படும் கானா பாடல்களை அதிக அளவு தான் இசையமைக்கும் படங்களில் இடம்பெறச் செய்தவர் தேவாதான்.

தேவா பாணி

தேவா பாணி

கானா மட்டுமல்ல, தன்னால் எந்த வகைப் பாடல்களையும் உருவாக்க முடியும் என பல படங்களில் நிரூபித்தார் தேவா. சினிமாவில் அவ்வப்போது என்ன வகை இசை ரசிக்கப்படுகிறதோ, அந்த பாணியை பின்பற்றி இசையமைத்து வந்தார். இதுதான் தேவா பாணி.

ரஜினி - கமல்

ரஜினி - கமல்

அண்ணாமலே, பாட்ஷா, அருணாச்சலம் என சூப்பர் ஸ்டாரின் மூன்று மெகா ஹிட் படங்களுக்கு இசையமைத்தார் தேவா. அதே போல கமலுக்கு அவ்வை சண்முகி என்ற பெரிய ஹிட் படத்துக்கு இசை தந்தார்.

தேவா குரல்

தேவா குரல்

தான் உருவாக்கும் கானா பாடல்களை தானே எழுதி பாடுபவர். இவர் குரலுக்கு தனி ரசிகர்களே உண்டு. அமரர் இயக்குநர் மணிவண்ணனையும் சில கானா பாடல்களை அவர் குரலில் பாட வைத்துள்ளார் தேவா.

இடைவெளி

இடைவெளி

400 படங்களுக்கு இசையமைத்த தேவா, நீண்ட நாட்களாக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பமே அவருக்கு அமர்க்களமாக இருக்கிறதாம்.

6 படங்கள்

6 படங்கள்

புதிதாக ஆறு படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு வந்துள்ளனவாம். இன்றைய நவீன டிரெண்டுக்கு எற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு இசையமைத்து வருவதாகத் தெரிவித்தார் தேவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X