Niyathi: தமிழில் அடுத்த ஹீரோயின் ரெடி.. மகளின் க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட தேவதர்ஷினி!

சென்னை: சீரியல்கள் மற்றும் படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகை தேவதர்ஷினி. இவர் நடிகர் சேத்தனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களுக்கு நியதி என்ற மகள் உள்ளார். இவர் 96 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தொடர்ந்து பிகில் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை, முக்கியமான தேர்வு இருந்ததால் நிராகரித்துள்ளார். தற்போது படங்களில் கமிட்டாகி வருகிறார்.

மலையாளத்தில் அறிமுகமாகும் தேவதர்ஷினி மகள்: ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கியவர் நடிகை தேவதர்ஷினி. தான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஆங்கராகி ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் தொடர்ந்து சீரியல்களில் நடிக்கத் துவங்கினார். கனவுகள் இலவசம் என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமான தேவதர்ஷினி தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார். மர்மதேசன், ரமணி vs ரமணி போன்ற தொடர்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன.

இந்நிலையில் மர்மதேசம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சேத்தன் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு நியதி என்ற மகள் உள்ளார். விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான 96 படத்தில் இவர் சிறுவயது தேவதர்ஷினியாக நடித்திருந்தார். இந்த கேரக்டர் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்நிலையில் மகளை நாயகியாக்கும் முயற்சியில் தேவதர்ஷினி இறங்கினார்.

நியதியின் அடுத்தடுத்த போட்டோஷுட்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தேவதர்ஷினியின் சாயலில் அப்படியே இருக்கும் நியதிக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலையில் நியதியின் போட்டோஷுட் புகைப்படங்களை தேவதர்ஷினி வெளியிட்டிருந்தார். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் மிகவும் க்யூட்டாக இந்தப் புகைப்படங்களில் ரசிகர்களை கவர்ந்திருந்தார் நியதி.

முன்னதாக விஜய்யின் பிகில் படத்தில் நடிக்கவும் நியதிக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அப்போது மிகவும் முக்கியமான தேர்வு ஒன்றை எழுத வேண்டியிருந்ததால் அந்த வாய்ப்பை நியதியால் ஏற்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ராணி என்ற மலையாளப்படத்தில் நியதி கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தின் வீடியோ பாடலையும் தேவதர்ஷினி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

Devadharshinis daughter Niyathi introduces in Malayalam movie

இந்நிலையில் நியதியின் புதிய போட்டோஷுட் புகைப்படங்களையும் தேவதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மிகவும் தனித்தன்மையுடன் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 96 படத்தில் நடித்த சுட்டிப் பெண்ணா இவர் என்று இந்தப் புகைப்படங்கள் கேள்வி கேட்க வைத்துள்ளது. மிகவும் அழகாக நீருக்குள் இருந்தபடி நியதி கொடுத்துள்ள போஸ்கள், ரசிகர்களை கிறங்கடித்துள்ளன. விரைவில் இவர் தமிழிலும் ஒரு வலம்வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X