மறுபடியும் மொதல்ல இருந்தா ..யாருடா இப்படி கிளப்பிவிட்டது ..

சென்னை :தேவர் மகன் 2 டூப்ளிகேட் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் அவர்களது ரசிகர்கள்.ஏற்கனவே அஜித்தை வைத்து போஸ்டர் செய்தும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டு டாப் ஹீரோக்கள் நடித்தால் படம் சூப்பர் ஹிட் என்பதற்கு முன்னுதாரணமான திரைப்படம் தான் "தேவர் மகன் ".இப்படத்தை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது .

ரேவதி ,கௌதமி என்ற இரண்டு ஹீரோயின்கள் நடிப்பும் ,இசைஞானி இளையராஜாவின் இசையும் எத்தனை முறை பார்த்தாலும் ,கேட்டாலும் சலிக்கவே சலிக்காது என்பது தான் உண்மை .

மிரட்டல்

மிரட்டல்

உலகநாயகன் கமல்ஹாசன் ,செவாலியே சிவாஜி கணேசன் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவை மிரட்டிய படம் தான் தேவர் மகன். நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காத ஒரு அற்புதமான படம் என்றால் அது தேவர் மகன் மட்டும் தான் . அப்படிப்பட்ட ஒரு தமிழ் படத்தை இன்று வரை பலரும் பல காரணங்களுக்காக உதாரணமாக பேசிவருகிறார்கள்.கமல் படம் என்றாலே வித்யாசமான கதை களம் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே .

வெட்டி பந்தா

வெட்டி பந்தா

எத்தனையோ படங்கள் பார்ட் 1 , பார்டு 2 என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள் .இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில படங்கள் இரண்டாம் பாகம் எடுக்காமல் இருந்தால் நல்லது என்று பலரும் கூறி வருகிறார்கள் .பல வெட்டி பந்தா படங்கள் உதிரி பாகங்களாக வெளிவரும் நிலையில் ,சில நல்ல கருத்துள்ள படங்கள் வெளிவந்தால் ரசிப்பதற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தான் பலரின் வேண்டுகோள் .

ரசிகர்களின் நோக்கம்

ரசிகர்களின் நோக்கம்

தேவர் மகன் போன்ற படங்கள் பாகம்-2 தேவையா என்று ஒரு கேள்வி எழும் பொழுது கண்டிப்பாக வேண்டும் என்று தான் பலரும் வேண்டுகோளாக இருக்கிறது .சிவாஜிகணேசன் அவர்களுடன் உலகநாயகன் கமல் நடித்தது மிகச்சிறந்த ஒரு பொருத்தம் அதே கதாபாத்திரத்தில் இப்பொழுது சூர்யா அவர்கள் கமலின் கதாபாத்திரத்திலும், சிவாஜி கணேசன் அவர்கள் ஏற்ற பாத்திரத்தை கமல் அவர்கள் நடித்து தேவர் மகன் இரண்டாம் பாகம் வெளி வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனையாக ரசிகர்கள் டூப்ளிகேட் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் .

டூப்ளிகேட் போஸ்டர்

டூப்ளிகேட் போஸ்டர்

பல ரசிகர்களின் எதிர்பார்ப்பை இணையதளத்தில் பலவிதமான போஸ்டர்கள் மூலம் பரவி வருகிறார்கள். இந்த முயற்சி உண்மையில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை போஸ்டர் மூலம் வெளியிட்டு வருகின்றனர் .இதேபோல் கமலுடன் அஜித்தை வைத்து அஜித் ரசிகர்கள் போஸ்டர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு நடக்குமா

எதிர்பார்ப்பு நடக்குமா

டாப் ஹீரோவான அஜித்தோ ,சூர்யாவோ ,மிகவும் வித்தியாசமாக ஜாதி மத பிரச்சனைகளை மிகவும் நுணுக்கமாக கையாண்டு மண்ணோடு கலந்த கலாச்சாரம் மிகுந்த வசனங்கள் மூலம் பேசி நடித்தால் , வெற்றி வாகை சூடிய தேவர் மகன், தேவர் மகன் 2வாக பிரமாண்டமாக இருக்குமா என்பது தான் கேள்வி . இப்போது அந்த படத்தை மீண்டும் எடுத்தால் அதே வீரியம் அதே சுவாரசியம் அதே கம்பீரம் போன்ற எல்லாம் கலந்த ஒரு சிறந்த படமாக அமையுமா? என்பது இயக்குனர்கள் கையில் தான் இருக்கிறது.இப்படி ஒரு கற்பனை நடக்குமா ,நடக்காதா என்பதை பொறுத்து இருந்து தான் நாம் பார்க்க வேண்டும் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X