சவால் விட்ட இயக்குநர்.. சாதித்து காட்டிய கமல்.. ஒரே வாரத்தில் ரெடியான தேவர் மகன் ஸ்க்ரிப்ட்!
சென்னை: தலைவன் இருக்கின்றான் லைவ் நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டு பல விசயங்களை நேரலையில் பகிர்ந்து கொண்டனர்.
Recommended Video
இருவரும் இணைந்து ஷங்கரின் இந்தியன் படத்தில் பணிபுரிந்த நினைவுகளை பற்றி நிறைய பேசினர்.
தேவர்மகன் இரண்டாம் பாகமான தலைவன் இருக்கின்றான் படத்தில் மீண்டும் இருவரும் இணைந்து பணிபுரிய உள்ளனர்.

தேவர் மகன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 1992ம் ஆண்டு வெளியான தேவர் மகன் படம் 175 நாட்கள் ஓடி பிளாக்பஸ்டர் அடித்தது மட்டுமின்றி 5 தேசிய விருதுகளையும் குவித்த படம். இந்த படத்தை கமல்ஹாசனின் நண்பரும் இயக்குநருமான பரதன் இயக்கி இருந்தார்.

ஆனால் கதை
ஆனால், அந்த படத்திற்கு திரைக்கதை எழுதியது நடிகர் கமல்ஹாசன் தான். அதுவும் 7 நாட்களில் அந்த படத்தின் மொத்த ஸ்க்ரிப்டையும் தான் எழுதி முடித்த ரகசியத்தை நேற்று ரஹ்மானுடன் லைவ்வில் பேசும் போது வெளிப்படுத்தினர் கமல்ஹாசன். அதை கேட்ட உலகநாயகன் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்தனர்.

இயக்குநர் சவால்
தேவர் மகன் படத்திற்கு திரைக்கதையை ஒரு மாதத்தில் எழுதி விடுவீங்களா? இல்லை ரொம்ப லேட் ஆகுமா? என இயக்குநர் கேட்ட கேள்வியை சவாலாக எடுத்துக் கொண்டு 7 நாட்களில் எழுதி கொடுத்த சுவாரஸ்யமான தகவலை கமல் பகிர்ந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எத்தனையோ சாதனைகளை செய்துள்ள இந்த சகலகலா வல்லவனின் இன்னொரு சாதனை இது.

நீண்ட நாட்களும் ஆகலாம்
மேலும், மறுபடியும் தன்னால் 7 நாட்களில் ஒரு படத்திற்கான திரைக்கதையை எழுத முடியுமா? என்றால் அது தனக்கு தெரியாது என்றும், சில படங்களுக்கு ஒரு மாதத்தில் கதை எழுதியிருக்கிறேன். சில படங்களுக்கு வருஷ கணக்கு கூட ஆகலாம் என்றும் கமல் பதில் அளித்திருந்தார்.

ரகசியமான பாடல்
ஏ.ஆர். ரஹ்மான் இசையிலேயே கமலுக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று இருப்பதாகவும், ஆனால், அது இன்னமும் வெளியாகவில்லை என்றும், தலைவன் இருக்கின்றான் படத்தில் அந்த பாடல் வெளியாகலாம் என்றும் ஒரு சூப்பரான மேட்டரை இசைப்புயல் மற்றும் கமல் ரசிகர்கள் மத்தியில் போட்டு உடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











