Devara Box Office: பாக்ஸ் ஆபிஸ் சுனாமி.. தேவரா முதல் நாள் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சென்னை: ஜூனியர் என்டிஆர் நடிப்பில் நேற்று வெளியான தேவரா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுனாமி போல முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டையை அள்ளி அதிர விட்டுள்ளது. தேவரா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வந்தாலும் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் படத்தை தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.

தெலுங்கில் இந்த ஆண்டு வெளியான பிரபாஸின் கல்கி படத்தின் வசூலையே தேவரா படம் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக கூறுகின்றனர். தமிழில் விஜய் நடித்து வெளியான லியோ மற்றும் கோட் படங்களின் முதல் நாள் வசூல் சாதனைக்கு எல்லாம் முதல் நாளிலேயே தேவரா வேட்டு வைத்திருக்கிறது.

devara box office jr ntr

அதிகபட்சமாக முதல் நாளில் தேவரா திரைப்படம் 172 கோடி ரூபாய் வசூலை உலகம் முழுவதும் தேவரா படம் அள்ளியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

தேவரா முதல் நாள் வசூல்: கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் முதல் நாளில் 172 கோடி ரூபாய் வசூல் வேட்டையை நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தேவரா திரைப்படம் உலகம் முழுவதும் 130 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வசூல் சுனாமியாக 172 கோடி ரூபாய் வசூல் என தயாரிப்பு நிறுவனம் தாறுமாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மெகா பிளாக்பஸ்டர்: தேவரா திரைப்படத்தின் திரைக்கதை சிறப்பாக இல்லை என்றும் அந்த படம் பெரிதாக ஓடாது என விமர்சகர்கள் நேற்று முதலே ஒரு பக்கம் கழுவி ஊற்றி வந்தாலும் ஜூனியர் என்டிஆர் சோலோ சிங்கமாக நடித்துள்ள தேவரா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மெகா பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை என்கின்றனர்.

கல்கி வசூலுக்கு சிக்கல்?: டோலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம் இருந்து வரும் நிலையில், தெலுங்கில் கல்கி படம் 65.8 கோடி கலெக்ட் செய்த நிலையில், தேவரா 68 கோடி ரூபாய் வசூலை ஹோம் கிரவுண்டில் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை நடத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

1000 கோடி வருமா?: தேவரா திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரியளவில் வசூல் வேட்டை நடத்தியுள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், திங்கட்கிழமைக்குப் பிறகு மற்ற இடங்களில் படம் ஓடினால் தான் கல்லா கட்டும் என்றும் இல்லை என்றால் விஜய்யின் கோட் படத்தை போல 400 முதல் 500 கோடிக்குள் சுருங்கி விடும் என்றும் கூறுகின்றனர். 1000 கோடி வசூலை தேவரா அள்ள வாய்ப்பே இல்லை என்றே பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

ஜூனியர் என்டிஆர் மேஜிக்: ஆனால், அதையெல்லாம் தாண்டி ஜூனியர் என்டிஆரின் மேஜிக் நிகழுமா? என்கிற எதிர்பார்ப்புகளும் டோலிவுட்டில் தற்போது எழுந்துள்ளன. தேவரா படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் அடுத்து பெரிய படம் என்றால் புஷ்பா 2 திரைப்படம் தான் என்றும் டிசம்பர் மாதம் 6ம் தேதி அந்த படம் வெளியானால் இதைவிட வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X