Devara Box Office: ஜூனியர் என்டிஆர் சோலி முடிஞ்சு.. 68% சரிவை சந்தித்த தேவரா வசூல்.. அவ்ளோதானா?
சென்னை: கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான், பிரகாஷ் ராஜ், முரளி ஷர்மா, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்த தேவரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வந்தது. முதல் நாளிலேயே அதிகபட்சமாக 172 கோடி ரூபாயை தேவரா திரைப்படம் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
ஆனால், படத்திற்கு கிடைத்த பெருமளவிலான நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக வெள்ளிக்கிழமை வந்த அளவுக்கு கூட வசூல் வேட்டை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வராமல் படம் சரிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

இந்நிலையில், திங்கட்கிழமையான நேற்று அதிகபட்சம் 68 சதவீத சரிவை இந்தியாவில் தேவரா திரைப்படம் சந்தித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ராஜமெளலி இல்லாமல்: பிரபாஸுக்கு நேர்ந்தது போலவே ராஜமெளலி இல்லாமல் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசத் தொடங்கி விட்டனர். ராஜமெளலி இல்லாமல் சலார் மற்றும் கல்கி படங்களை பிரபாஸ் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படங்களாக மாற்றிக் காண்பித்து விட்டார். ஜூனியர் என்டிஆருக்கு ஆர்ஆர்ஆர் படத்துக்குப் பிறகு 6 வருடங்கள் கழித்து சோலோ படமாக வெளியான தேவரா படத்தின் கதை மற்றும் திரைக்கதை சிறப்பாக அமைந்திருந்தால் இந்த படமும் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்திருக்கும் என்கின்றனர்.
தேவராவுக்கு மோசமான விமர்சனங்கள்: ஜூனியர் என்டிஆர் ரசிகர்களையே திருப்திப்படுத்தாத அளவுக்கு தேவரா முதல் பாகத்தின் கதையை இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கி கோட்டை விட்டு விட்டார் என்றும் அந்த படத்தின் 2ம் பாகத்துக்காக இன்னொரு 300 கோடி செலவு செய்வது எல்லாம் வீண் வேலை என ரசிகர்களே படுமோசமாக விமர்சித்து வருகின்றனர்.
68 சதவீத வீழ்ச்சி: தேவரா திரைப்படம் முதல் நாளில் 172 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2ம் நாள் வசூலாக 243 கோடி ரூபாய் என்கிற அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை நிலைமை மேலும் மோசமாகி வெறும் 304 கோடி ரூபாய் தான் வசூல் செய்ததாக அறிவித்துள்ளனர். நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையிலும், 3 நாட்களில் 300 கோடி கிளப்பில் ஜூனியர் என்டிஆர் படம் இணைந்து விட்டதாக ரசிகர்கள் கொண்டாடினாலும், இந்த பாக்ஸ் ஆபிஸ் நம்பர் சுத்த பித்தலாட்டம் என ஹேட்டர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், திங்கட்கிழமையான நேற்று இந்தியாவில் வெறும் 12.5 கோடி ரூபாய் வசூலைத்தான் தேவரா பெற்றிருப்பதாகவும் சுமார் 68 சதவீத வீழ்ச்சியை தேவரா 4வது நாளிலேயே சந்தித்து இருப்பதாக கூறுகின்றனர்.
இதுவரை வசூல்: தேவரா திரைப்படம் இதுவரை இந்தியளவில் 173.1 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் 320 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறை நாள் என்பதால் தேவரா படத்துக்கு வசூல் அதிகரிக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ள நிலையில், 400 கோடி வசூலை எட்டுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











