Devara Day 6 Box Office: 400 கோடி கிளப்பில் இணைந்ததா தேவரா?.. கோட் லைஃப் டைம் வசூலுக்கு வேட்டு?

சென்னை: ஜூனியர் என்டிஆர் டபுள் ஆக்ஷனில் நடித்த தேவரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளே 172 கோடி ரூபாய் வசூல் ஈட்டி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் ஆக மாறியது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, பிரகாஷ் ராஜ் மற்றும் கலையரசன் உள்ளிட்ட பலர் தேவரா படத்தில் நடித்துள்ளனர்.

devara box office goat


விமர்சன ரீதியாக தேவரா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும் வசூல் ரீதியாக தொடர்ந்து திரையரங்குகளில் படம் வெற்றிநடைபோட்டு வருவதாக கூறுகின்றனர்.

400 கோடியை நெருங்கிய தேவரா: ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடல் ஆக்‌ஷன் படமாக வெளியாகியுள்ள தேவரா படத்தின் முதல் பாகம் ஆறாவது நாளான நேற்று உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வரை வசூல் செய்து 386 கோடி ரூபாய் வசூலை இதுவரை கடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரம் முடிவில் 400 முதல் 500 கோடி ரூபாய் வசூல் வரை தேவரா திரைப்படம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட் லைஃப் டைம் வசூலுக்கு வேட்டு: தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகிய அதிகபட்சமாக 440 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இந்த வார இறுதிக்குள் கோட் படத்தின் லைஃப் டைம் வசூலை ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் மிஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளிலிருந்து கோட் படத்தின் வசூல் சாதனையை தேவரா முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய்யை முந்திய பிரபாஸ் ஜூனியர், என்டிஆர்: டோலிவுட் நடிகர்களான பிரபாஸ் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிகர் விஜய்யை விட குறைவான சம்பளத்தை பெற்று வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து விஜய் படங்களை முறியடித்து வருகின்றனர். இந்த ஆண்டு கல்கி படத்தின் மூலம் நடிகர் பிரபாஸும் தேவரா படத்தின் மூலம் ஜூனியர் என்டிஆரும் விஜய் பட வசூலை ஓவர்டேக் செய்யவுள்ளனர். அடுத்து டிசம்பர் 6 ஆம் தேதி புஷ்பா 2 படத்தின் மூலம் அல்லு அர்ஜுனும் கோட் படத்தின் வசூலை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன், கங்குவா வீழ்த்துமா?: விஜய்யின் கோட் படத்தின் வசூலை அடுத்து தமிழில் வெளியாகவுள்ள ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட படங்கள் முறியடிக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. வேட்டையன் திரைப்படத்தின் கதை க்ளிக் ஆனால் மட்டுமே அதற்கு வாய்ப்பு என்றும் கங்குவா திரைப்படம் முறியடிக்குமா? என்பது படம் வெளியானால் தான் தெரியவரும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X