அந்த விஷயத்துல விஜய்.. கடந்த சில வருஷமா அவரோட பேசவேயில்லை.. தேவரா நடிகர் சொன்ன விஷயம்!
சென்னை: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப் அலிகான் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தேவரா படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ஆச்சார்யா படத்திற்கு பிறகு கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளன. படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்தப்படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் ஜூனியர் என்டிஆர்: நடிகர் ஜூனியர் என்டிஆர் மிகப்பெரிய சினிமா பின்னணியிலிருந்து நடிக்க வந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். ஆஸ்கார் வென்ற ஆர்ஆர்ஆர் படத்திலும் ராம்சரணுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் தேவரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் 27ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தேவரா படம்: படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகியுள்ளார் நடிகை ஜான்வி கபூர். இதன்மூலம் அவர் தென்னிந்திய மொழிகளில் தனது என்ட்ரியை துவங்கியுள்ளார். படம் ரிலீசாவதற்கு முன்னதாகவே நடிகர் ராம்சரணுடன் அடுத்த படத்திலும் கமிட்டாகியுள்ளார். அனிருத் இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியான நிலையில், ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் இடையிலான கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்துள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
ஜூனியர் என்டிஆர் விருப்பம்: சென்னையிலும் தேவரா படத்தின் பிரமோஷன்களில் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜூனியர் என்டிஆர், தான் சென்னையில்தான் குச்சுப்புடி கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். நாம் மொழியால் பிரிந்திருக்கிறோம், சினிமாவால் அல்ல என்று கூறியுள்ள அவர், வெற்றிமாறன் இயக்கத்தில் நேரடி தமிழ் படத்தில் நடித்து அதை தெலுங்கில் டப்பிங் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மேலும் தேவரா படம் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்கு பாராட்டு: இதனிடையே விஜய் குறித்து பேசிய ஜூனியர் என்டிஆர், நடனம் என்பது நடனமாக தெரியவேண்டும் என்றும் சண்டை போலவோ, ஜிம்னாஸ்டிக் போலவோ தெரியக்கூடாது என்றும் கூறியுள்ளார். கடினமாக இல்லாமல் இயல்பாக நடனம் இருக்க வேண்டும் என்றும் அதை விஜய் சிறப்பாக செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மிகவும் கூலாக தன்னுடைய நடனத்தை விஜய் மேற்கொள்வதாகவும் அவரது நடனத்திற்கு தான் மிகப்பெரிய ரசிகன் என்றும் கூறியுள்ளார். இதனிடையே தான் தொடர்ந்து விஜய்யுடன் பேசி வந்ததாகவும் ஆனால் சமீப ஆண்டுகளாக தங்களுக்குள் தொடர்பு இல்லை என்றும் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











