twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "தயவுசெய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள்"... தேவராட்டம் இயக்குனர் முத்தையா பேச்சு!

    |

    சென்னை: தேவராட்டம் சாதியப் படம் அல்ல என்று இயக்குனர் முத்தையா தெரிவித்துள்ளார்.

    முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக், மஞ்சுமா மோகன், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தேவராட்டம். நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் முத்தையா, தேவராட்டம் சாதிய படம் அல்ல என்றார்.

    அடுத்தடுத்து பிரச்சனை: அட்லிக்கு நேரம் சரியில்லையோ? அடுத்தடுத்து பிரச்சனை: அட்லிக்கு நேரம் சரியில்லையோ?

    படிப்பில் மிடில் கிளாஸ்

    படிப்பில் மிடில் கிளாஸ்

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான்.

    கொம்பன் படத்திற்கு...

    கொம்பன் படத்திற்கு...

    ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார். இதுதான் அவரது வளர்ச்சி.

    நல்ல அடையாளம்

    நல்ல அடையாளம்

    கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். தேவராட்டம் சாதிப்படம் கிடையாது. எனக்கு அது தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆகவேண்டிய இருக்கிறது.

    பொள்ளாச்சி சம்பவம்

    பொள்ளாச்சி சம்பவம்

    வெளியில் வந்தால் தான் பிரண்ட்ஷிப். வீட்டுக்குள் வந்தால் உறவு தான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம்.

    கோவத்தின் வெளிபாடு

    கோவத்தின் வெளிபாடு

    கோவத்தின் வெளிப்பாடு தான் ஹீரோவின் கேரக்டர். பணம் என்பது சினிமாவுக்கு ரொம்ப முக்கியம். அதனால் தான் கமர்சியல் விசயங்களை படத்தில் அதிகமாக வைக்கிறேன். சிட்டியில் படம் எடுத்தாலும் உறவுகளைப் பற்றித்தான் படம் எடுப்பேன்.

    சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள்

    சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள்

    தயவுசெய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள். இந்தப்படத்தை இவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடிந்ததிற்கு படத்தில் உழைத்த அனைவரும் காரணம். இந்தப்படத்தை முழுதும் பார்த்துவிட்டு ஞானவேல்ராஜா சந்தோஷப்பட்டார். அதுதான் எனக்கு முதல் சந்தோஷம்." இவ்வாறு அவர் கூறினார்.

    English summary
    While speaking in the press meet of Devarattam, director Muthaiah said that its not a caste based movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X