கிங் காங் மகள் திருமணம்.. கட்டுக்கடங்காத கூட்டம்.. வாசல்வரை வந்து திரும்ப சென்ற தேவயானி
சென்னை: நடிகர் கிங் காங்கின் மகள் திருமணம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. திருமணம் முடிந்து நடந்த வரவேற்பில் முதலமைச்சர், எம்.பி, முன்னாள் அமைச்சர் என பலர் கலந்துகொண்டார்கள். முதலமைச்சர் வந்ததை பார்த்த பலரும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றார்கள். இந்நிலையில் திருமணம் முடித்த திருப்தியோடு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் கிங் காங்.
சங்கர் ஏழுமலை என்ற இயற்பெயரை கொண்ட கிங் காங்; ரஜினிகாந்த்தின் அதிசய பிறவி படத்தி நடித்து பயங்கர ஃபேமஸ் ஆனார். அப்படத்தில் அவர் ஆடிய பிரேக் டான்ஸ் இன்றளவும் பலரால் ரசிக்கப்படுகிறது. அந்தப் படத்துக்கு பிறகு 90களில் பிஸியான காமெடி நடிகராக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார். வடிவேலு உள்ளிட்டோருடனும் அவர் நடித்திருக்கிறார்.
மகளுக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க் தனது மகள் கீர்த்தனாவின் காதலை திருமணத்துக்கு கொண்டு செல்ல ஒத்துக்கொண்டு திருமண ஏற்பாடுகளை தடல் புடலாக ஆரம்பித்தார். முதலில் சிம்ப்பிளாக நடத்தலாம் என்று திட்டமிட்டு; பிறகு அதுவாகவே அமைந்ததால் பல பிரபலங்களுக்கு பத்திரிகை வைத்தார். இங்கு முதலமைச்சர், நடிகர்கள், நடிகைகளுக்கு அழைப்பிதழ் கொடுத்த அவர்; பெங்களூரு சென்று சிவராஜ்குமாருக்கும் அழைப்பிதழ் வழங்கினார்.

எழுந்த விமர்சனம்: கிங் காங் அப்படி பத்திரிகை வைத்தது பலரிடம் பாராட்டை பெற்றது. ஆனால் வழக்கம்போல் ஒருதரப்பினரோ, 'பிரபலங்களுக்கு எல்லாம் பத்திரிகை கொடுத்து திருமணத்தை வைத்து நன்றாக கிங் காங் வசூல் செய்ய திட்டமிட்டிருக்கிறார்' என அவதூறாக பேசினார்கள். கிங் காங்கோ அதை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடிப்பதில் கவனம் செலுத்தினார்.
முதலமைச்சரின் வருகை: திட்டமிட்டபடி சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் முருகன் கோயிலில் திருமணம் நடந்தது. அதில் குறிப்பிட்ட பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமண வரவேற்பு சென்னையில் இருக்கும் தனியார் மண்டபத்தில் நடந்தது. அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.பி திருமாவளவன்,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என பலர் கலந்துகொண்டார்கள். முதலமைச்சரின் வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை.
நடிகர்கள் மீது விமர்சனம்: ஒருபக்கம் அரசியல் பிரமுகர்கள் வந்தாலும் மறுபக்கம் சினிமா பிரபலங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வரவில்லை. இதனால் அவர்கள் மீது பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். இந்நிலையில் திருமணத்தை நல்லபடியாக முடித்த மகிழ்ச்சியோடு தனியார் யூடியூப் சேனலுக்கு கிங் காங் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் சில விஷயங்களை விளக்கியிருக்கிறார்.
கிங் காங் பேட்டி: அந்தப் பேட்டியில் அவர், "நான் மொத்தம் 1100 பத்திரிகைகள் அடித்தேன். ஆனால் 10,000 பேர்வரை வந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். முதலமைச்சர் வருகிறார் என்பதே எனக்கு அன்றைய மாலை 5 மணிக்குத்தான் தெரியும். என்னிடம் நன்றாகவே பேசினார். அதேபோல் பலர் மண்டப வாசல்வரை வந்து கூட்டம் காரணமாக திரும்ப சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன். தேவயானி மேடம் வந்ததாகவும்; ஆனால் கூட்டம் நிறைய இருந்ததால் உள்ளே வர முடியாமல் திரும்ப சென்றுவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். அதேபோல் பாக்யராஜ், விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் எல்லாம் வருவதாகத்தான் இருந்தார்களாம். ஆனால் முதலமைச்சரின் வருகையால் கூடிய கூட்டம் மற்றும் சில காரணங்களால் வரமுடியவில்லையாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











